பிறந்த நாள் என்பது வாழ்வில் ஒரு வருடத்தை கடந்துவிட்டோம் என்பதை நினைவு படுத்துவது. உபயோகமாகவா இல்லையா என்பது வேறு விஷயம். சிலர் பிறந்த நாளை கொண்டாடுவது இல்லை.
ஆனால் பலருக்கு பிறந்த நாள் கொண்டாடுவது பிடித்துள்ளது. எனவே ஒருவர் பிறந்த நாள் என தெரிந்தால் அவரை அழைத்து வாழ்த்தலாமே. முடியாத பட்சத்தில் நம் தாய்மொழியில் அழகாய் வாழ்த்து செய்தி அனுப்பலாமே.
அதை விடுத்து, தற்போது பலரும் ‘HBD’ என கடமைக்கு வாட்ஸப்பில் வாழ்த்து அனுப்புவதும் பதிலுக்கு அவரும் அதே கடமை உணர்வுடன் ‘TQ’ என அனுப்புவதும் பார்க்க சகிக்கவில்லை. அதற்கு பதில் சொல்லாமல் விட்டுவிடுவது எவ்வளவோ மேல்.
ஒருவரை மனதார வாழ்த்த சில கணங்கள்கூட செலவழிக்க விரும்பாதவர்களின் ஆசியால் நமக்கு என்ன கிடைத்துவிடப்போகிறது?