அம்னெஷ்டி இண்டர்நேஷ்னலுக்கு மூடுவிழா

தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் வெளிநாட்டு கணக்கு வழக்குகளை முறையாக தாக்கல் செய்ய வேண்டும். கணக்கு வழக்குகளை முறையாக தாக்கல் செய்யாத தொண்டு நிறுவனங்களின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்தது மத்திய அரசு.

தொண்டு நிறுவனம் எனும் பெயரில் மதமாற்றம், கருப்பு பண விவகாரம், பயங்கரவாதத்திற்கு நிதி திரட்டுதல் என பல தேச விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த பல தொண்டு நிறுவனங்களும் இதனால் தங்கள் தூக்கத்தை தொலைத்துள்ளன.

இதில் தற்போது சிக்கியுள்ளது, பிரபல அம்னெஸ்டி இண்டர்நேஷனல் நிறுவனம். வசமாக மாட்டிக்கொண்டதால் தன் இந்திய செயல்பாடுகளை நிறுத்திக்கொள்வதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு, காஷ்மீர் விவகார தலையீடு, டெல்லி கலவர தலையீடு, வடகிழக்கு மாநில செயல்பாடுகள் என இவர்களின் தலையீடு இல்லாத இடமே இல்லை.

அநீதிக்கு எதிராக குரல் கொடுக்கிறோம் என்று கூறிக்கொண்டு, நம் தேசத்திற்கு எதிராக பல நடவடிக்கைகளில் இந்த நிறுவனம் தொடர்ந்து ஈடுபட்டு வந்தது.
அமெரிக்க கருப்பின இளைஞர் ஜார்ஜ் ப்ளாய்ட் கொல்லப்பட்டதை எதிர்த்து இங்குள்ள முஸ்லிம்கள் கலவரம் செய்ய வேண்டும், அரசுக்கு எதிராக போராட வேண்டும் என மக்களை தூண்டியது சம்பந்தமாக இதன் முன்னாள் இயக்குனர் ஆகர் படேல் மீது வழக்குகள் பதியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

டெல்லி கலவரக்காரர்களை விடுவிக்க தொடர்ந்து முயன்றதுடன், அந்த கலவரத்துக்கு ஹிந்துக்களே காரணம் எனவும் அபாண்டமாக பழி சுமத்தவும் முயற்சித்தது அம்னெஸ்டி.

முறையாக கணக்கு வழக்கை காட்ட முடியாத அம்னெஸ்டி, போகும்போதுகூட அரசுக்கு எதிராக பேசி விஷத்தை உமிழ்ந்துள்ளது.