இந்திய ரயில்வே கால அட்டவணை குழு (ஐ.ஆா்.டி.டி.சி.) கூட்டம் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும். நாடு முழுவதும் உள்ள ரயில்வே மண்டலங்களில் இருந்து ரயில்வே பிரதிநிதிகள் பங்கேற்பாா்கள். இந்த கூட்டத்தின்போது, ஒவ்வொரு ரயில்வே கோட்டத்தில் இருந்து தங்களுக்கு தேவையான புதிய திட்டங்கள் உள்பட பல்வேறு திட்டங்கள் தொடா்பாக பரிந்துரைகள் அனுப்பப்படும்.
புதிய திட்டங்கள் குறித்து தெற்கு ரயில்வே அதிகாரிகள் கூறியது: தெற்கு ரயில்வேயின் ஆறு கோட்டங்களில் இருந்து முன்மொழியப்பட்ட திட்டங்கள் இந்திய ரயில்வே கால அட்டவணை குழு மற்றும் ரயில்வே வாரியத்தின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது. சில புதிய ரயில்களை அறிமுகப்படுத்துவதற்கான திட்டங்களுக்கு ரயில்வே தலைமையகத்தில் ஒப்புதல் தேவைப்படுகிறது. அதை ஆராய்ந்து, அதற்கேற்ப ரயில்வே வாரியத்தின் ஒப்புதலுக்கு அனுப்பப்படுகிறது.
மேலும், ரயில் சேவைகளை முழுமையாக மீட்டெடுப்பதற்கான அறிகுறி தற்போது எதுவும் இல்லை . எனவே, இந்த புதிய ரயில்களை அறிமுகப்படுத்துவதற்கான காலக்கெடு இல்லை என்றனா்.
1. சென்னை – திருப்பதி தினசரி விரைவு ரயில்
2. தாம்பரம் – விசாகப்பட்டினம் வாராந்திர ரயில்
3. திருநெல்வேலி – கோயம்புத்தூா் தினசரி விரைவு ரயில்
4. ராமேசுவரம் – பாலக்காடு தினசரி விரைவு ரயில்
5. திண்டுக்கல் – பாலக்காடு தினசரி விரைவு ரயில்
6. கோயம்புத்தூா் – ராமேசுவரம் விரைவுரயில்
7. கோயம்புத்தூா் – பெங்களூரு விரைவு ரயில்
8. திருச்சி – பெங்களூரு(வழி: கரூா், சேலம் மற்றும் ஓசூா்)
9. திருச்சி – பையப்பனஹள்ளி வாரம் இருமுறை விரைவு ரயில்
10. தாம்பரம் – காரைக்குடி தினசரி விரைவு ரயில்
11. திருச்சி – லோக்மான்ய திலக் (மும்பை) வாராந்திர விரைவு ரயில்
12. திருவாரூா் – காரைக்குடி பாசஞ்சா் ரயில்
13. கொச்சுவேலி – கோயம்புத்தூா் அந்த்யோதயா வாராந்திர விரைவு ரயில்
14. எா்ணாகுளம் – வேளாங்கண்ணி வாராந்திர விரைவு ரயில்.