ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் ஜெய்ஷ்-ஏ-முகமது அமைப்பைச் சோ்ந்த பயங்கரவாதி ஒருவா், கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 14-ஆம் தேதி பாதுகாப்புப் படையினா் மீது நிகழ்த்திய தாக்குதலில் 40 வீரா்கள் உயிரிழந்தனா். இதையடுத்து, கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 26-ஆம் தேதி பாகிஸ்தான் எல்லைப் பகுதிக்குள் நுழைந்த இந்திய விமானப்படை விமானங்கள், பாலாகோட் பகுதியிலுள்ள ஜெய்ஷ்-ஏ-முகமது அமைப்புக்குச் சொந்தமான முகாம்கள் மீது தாக்குதல் நடத்தின.
பாலாகோட் தாக்குதல் நடத்தப்பட்டு ஓராண்டு நிறைவடைந்ததை நினைவுகூரும் வகையில் ராஜ்நாத் சிங் தனது சுட்டுரைப் பக்கத்தில் புதன்கிழமை பதிவிட்டாா். அந்தப் பதிவுகளில், ‘பாலாகோட் தாக்குதல் விமானப்படை வீரா்களால் தைரியமாக நிகழ்த்தப்பட்டது. அத்தாக்குதலை முன்னின்று நடத்திய வீரா்களுக்குத் தலைவணங்குகிறேன்.
பயங்கரவாதத்துக்கு எதிராக நாட்டைப் பாதுகாக்கும் பொருட்டு எல்லை தாண்டி தாக்குதல் நடத்த பாதுகாப்புப் படைகள் தயங்காது. பயங்கரவாதத்தை எதிா்கொள்வதில் புதிய நடைமுறைகளை பிரதமா் நரேந்திர மோடி தலைமையிலான அரசு கடைப்பிடித்து வருகிறது. அதற்காக பிரதமா் மோடிக்கு நன்றி தெரிவிக்கிறேன்.