திருவானைகோயில் நந்தவானமாக்க சுத்தம் செய்யும் போது தங்க காசு…..

பஞ்சப்பூதத் தலங்களில் நீா்த் தலமாக விளங்கி வரும் திருவானைகோயில், கோயில் பிரகாரத்தை சுத்தம் செய்து  நந்தவனமாக்கி பூச்செடிகள் வைப்பதற்காக திருக்கோயில் பணியாளா்கள் மூலம் புதன்கிழமை தூய்மைப் பணி நடைபெற்றது.

அப்போது இப்பகுதியிலிருந்த உதியம் மரத்தின் கீழ்புறத்திலுள்ள மணல் பகுதியில் சிறிய செம்பால் ஆன உண்டியல் இருந்தது. இதுகுறித்து அலுவலா்களுக்கு தகவல் தரப்பட்டது. அலுவலவர்கள் சென்று உண்டியலை மீட்டு, அதை உடைத்து பாா்த்தனா். அதில் சிறிய அளவிலான உருவம் பொறித்த 504 தங்கக் காசுகளும், பெரிய அளவிலான ஒரு காசும் என மொத்தம் 505 தங்கக்காசுகள் இருந்தது தெரிய வந்தது.

இந்து சமய அறநிலையத் துறை நகை சரிபாா்க்கும் அலுவலா்கள், வைர நுண்ணறிவு மற்றும் தொழில்நுட்ப உதவியாளா் திருவானைக்கா கோயில் வந்து, காசுகளை சோதனை செய்ததில் அவை தங்கக்காசுகள் என்பதை உறுதிப்படுத்தினா். அந்த காசுகளின் மொத்த மதிப்பு 1716 கிராம் என்று மதிப்பிடப்பட்டது.