தேசிய குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து, அஸ்ஸாம் மாநிலத்தில் போராட்டங்களை நடத்தும் அனைத்து அசாம் கண பரிஷத் என்ற அமைப்பின் பின்புலத்தையும் சற்றே ஆய்வு செய்ய வேண்டும். இதே குடியுரிமை சட்ட திருத்த மசோதா, அஸ்ஸாம் மாநிலத்திற்கும், மற்றும் வடகிழக்கு எல்லைப்புற மாநிலங்களுக்கும் ஆபத்தாக முடியும் என்ற கற்பனையில் போராட்டங்களை நடத்துகிறார்கள். அசாம் இயக்கம் 1979 முதல் 1985 வரை அசாமில் சட்டவிரோதமாக குடியேறியவர்களுக்கு எதிராக ஒரு பிரபலமான இயக்கமாக இருந்தது, இது உண்மையான அடையாளத்தையும் அசாமின் பழங்குடி மக்களையும் பாதுகாக்க உருவான போராட்டம். எந்த நோக்கத்திற்காக ஆறு ஆண்டுகள் பள்ளி கல்லூரிகளை மூடி ஆர்பாட்டம் செய்தார்களோ, அதை முழுமையாக செயல்படுத்த முனைவது தான் தேசிய குடியுரிமை சட்ட திருத்த மசோதா என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். 1978-ல் அஸ்ஸாம் மாநிலத்தில் Mangaldoi பாராளுமன்ற தொகுதிக்கு இடைத் தேர்தல் வந்தது. பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கையில் திடீர் மற்றும் வியத்தகு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதை தேர்தல் அதிகாரிகள் கவனித்தனர். பிரச்சினையை அனைத்து அஸ்ஸாம் மாணவர் சங்கம் கையிலெடுத்தது. வாக்காளர் பட்டியலில் உள்ள வெளிநாட்டவரை நீக்காமல், இடைத் தேர்தலை நடத்தக் கூடாது, எல்லையை மூட வேண்டும் , வாக்காளர் பட்டியலில் உள்ள வெளிநாட்டவர்களின் பெயரை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து போராட்டங்கள் துவங்கின. இந்த துவக்க போராட்டமே, பின்னர் ஆறு ஆண்டுகள் நீடித்தது. ஆறு ஆண்டு கால தொடர் போராட்டத்தில் 855 அஸ்ஸாம் மக்கள் உயிரை பலி கொடுத்துள்ளார்கள்.
1961க்கு பின்னால், அன்றைய மேற்கு பாகிஸ்தான் ( பங்களா தேஷ்) நாட்டிலிருந்து சட்ட விரோதமாக, அஸ்ஸாமில் ஊடுருவியவர்களை இனம் கண்டு, அவர்களை வெளியேற்ற வேண்டும். அதே நேரத்தில், அஸ்ஸாம் மாநில வாக்காளர் பட்டியலிருந்து சட்ட விரோதமாக ஊடுருவியவர்களின் பெயர்களை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் முன் வைத்து 26.8.1979-ல் பல்வேறு அரசியல் மற்றும் சமுதாய அமைப்பினர் , அனைத்து அஸ்ஸாம் கன சங்கராம் பரிஷத் என்ற ஒரு புது அமைப்பை உருவாக்கினார்கள். இந்த அமைப்புடன் மாணவர் அமைப்பான அனைத்து அஸ்ஸாம் மாணவர் சங்கம் இணைந்து போராட்டத்தை நடத்தினார்கள். இந்த போராட்டத்தை நடத்துவதற்கு முன் 2-ந் தேதி பிப்ரவரி மாதம் 1980-ல் பிரதம மந்திரி திருமதி இந்திரா காந்திக்கு ஒரு குறிப்பானை ( Memorandum ) அனுப்பி வைக்கப்பட்டது. இதன் அடிப்படையில் 1980 முதல் 1983 வரை பல்வேறு கட்டங்களாக, பிரதம மந்திரி மற்றும் உள்துறை அமைச்சருடன், அனைத்து அஸ்ஸாம் மாணவர் சங்கமும், அனைத்து அஸ்ஸாம் கன சங்கராம் பரிஷத்தும் பேச்சு வார்த்தையில் கலந்து கொண்டார்கள். ஆனால் முடிவு எதுவும் எட்டப்படவில்லை.
வாக்காளர் பட்டியலில் உள்ள வெளி நாட்டவரின் பெயரை நீக்கி, புதிய வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடும் வரை எந்த அரசியல் கட்சியும் தேர்தலில் போட்டியிடக் கூடாது என மாணவர்கள் அமைப்பு கோரிக்கையை வைத்தார்கள். 27.11.1979 லிருந்து அனைத்து பள்ளி, கல்லூரிகள் மூட வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, அஸ்ஸாம் மாநிலத்தில் உள்ள கல்லூரிகள் மற்றும் பள்ளிகள் மூடப்பட்டன. அரசு அலுவலங்கள் முன் மறியல் போராட்டம் நடத்தியதின் காரணமாக, அரசு அலுவலங்கள் இயங்க வில்லை. இந்நிலையில் அஸ்ஸாம் மாநிலத்தில் தேர்தல் நடைபெறும் வாக்கு சாவடிகளில் மறியல் நடைபெற்றது. பார்படா தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் பேகம் அபிதா அகமது , வேட்பு மனு தாக்கல் செய்ய முயன்ற போது, பாதுகாப்பு பணியிலிருந்து ஐ.ஜி. கே.பி.எஸ். கில்லுக்கும் போராட்டகாரர்களுக்கும் நடந்த மோதலில், பார்படா தொகுதியின் அனைத்து அஸ்ஸாம் மாணவர் சங்கத்தின் செயலாளராக இருந்து Khargeswar Talukdar என்பவர் போலீஸால் அடித்து கொல்லப்பட்டார்.
1983-ல் காங்கிரஸ் அரசு சட்டவிரோதமாக உள்ளே நுழைந்த ஊடுருவல்கார்களை பாதுகாக்க சட்ட விரோத குடியேற்ற (தீர்ப்பாயம் மூலம் தீர்மானித்தல்) சட்டம் (I.M.D.T.) அஸ்ஸாம் மாநிலத்திற்கு என கொண்டு வரப்பட்டது. 1983 அக்டோபர் மாதம் 15ந் தேதி இச் சட்டம் அமுலுக்கு வந்தது. இந்த சட்டத்தின் நோக்கம், தீர்ப்பாயங்கள் அமைத்து அவை மூலமாக, ஒருவர் பாரத நாட்டைச் சார்ந்தவரா அல்லது சட்ட விரோதமாக உள்ளே நுழைந்தவரா என்று தீர்வு கண்டு, சட்ட விரோதமாக உள்ளே நுழைந்தவர்களை வெளியே அனுப்புவது. ஆனால் இந்த சட்டம் ஊடுருவியவர்களை பாதுகாப்பதற்கு கொண்டு வரப்பட்டதாக தெரிய வந்தது.
வெளிநாட்டவர் சட்டப்படி, யாராவது ஒருவர் இந்தியாரா அல்லது அந்நியரா என்கிற கேள்வி எழுந்தால், அந்நியர் சட்டத்தின்படி, அவர் தாம் இந்தியர் என்பதை நிரூபிக்க வேண்டும். ஆனால் 1983-ல் காங்கிரஸ் அரசு கொண்டு வந்த சட்ட விரோத குடியேற்ற ( தீர்ப்பாயம் மூலம் தீர்மானித்தல்) சட்டம் ( I.M.D.T.) படி, யார் மீது குற்றம் சுமத்தப்படுகிறதோ, அவர் தான் இந்தியர் என்பதை நிரூபிக்க வேண்டிய அவசியம் கிடையாது. யார் அவரை இந்தியரல்ல என்று குற்றம் சாட்டுகிறார்களோ அவர்கள் தான் அவர் இந்தியரல்ல என்று ஆதாரத்துடன் நிரூபிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது. இதை எதிர்த்தும் ஆர்பாட்டங்கள், போராட்டங்கள் நடந்தன.
இறுதியில் 1985-ம் வருடம் பிரதமராக இருந்த ராஜீவ் காந்தியின் முன்னிலையில் உடன்பாடு ஏற்பட்டு, போராட்டம் முடிவுக்கு வந்தது. உடன்பாட்டின் படி, 5.1 வெளிநாட்டினரைக் கண்டறிந்து நீக்குவதற்கான நோக்கங்களுக்காக, 1.1.1966 அடிப்படை தரவு மற்றும் ஆண்டாக இருக்கும். 5.2 1.1.1966 க்கு முன்னர் அசாமுக்கு வரும் அனைத்து நபர்களும், 1967 தேர்தல்களில் பயன்படுத்தப்பட்ட வாக்காளர் பட்டியலில் பெயர் குறிப்பிடப்பட்டவர்கள் உட்பட, முறைப்படுத்தப்படுவார்கள். 5.3 1.1.1966 (உள்ளடக்கியது) மற்றும் மார்ச் 24, 1971 வரை அசாமுக்கு வந்த வெளிநாட்டவர்கள் 1946 ஆம் ஆண்டு வெளிநாட்டினர் சட்டம் மற்றும் வெளிநாட்டினர் (தீர்ப்பாயங்கள்) உத்தரவு 1964 ஆகியவற்றின் படி கண்டறியப்படுவார்கள். உடன்பாட்டின் ஆறாவது பிரிவின் படி, குடியுரிமை வழங்கும் பட்சத்தில், அஸ்ஸாம் மக்களின் அரசியல் சாசனப்படி கொடுக்கப்பட்டுள்ள உரிமைகள் பாதுகாக்கப்படும். இந்த உடன்பாட்டின் ஷரத்துக்களை முழுமையாக மத்தியில் ஆண்ட காங்கிரஸ் கட்சி செயல்படுத்தவில்லை.
மத்திய காங்கிரஸ் அரசு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு சட்டமன்ற தேர்தலை நடத்தியது. தேர்தலில் அசாம் காண பரிசத் கட்சி முலம் பிரபல்ல குமார் மகந்தா முதல்வரானார். சில ஆண்டுகளுக்கு பின்பு அவரது கட்சியை உடைத்து காங்கிரஸ் தேர்தலை சத்தித்து தொடர்து 15 ஆண்டுகாலம் ஆளும் கட்சியானாது. அசாம் குடியுரிமை பிரச்சனையில் விதமான நடவடிக்கையும் எடுக்காதிருந்த நிலையில் உச்சநீதிமன்ற வழக்கு மூலம் உத்தரவிட்டு என்.ஆர்.சி. கணக்கு எடுக்கும்பணி தொடங்கியது. இறுதி பட்டியில் 2018 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட போது அதில் 46 லட்சம் பேர் வெளிநாட்டவர்கள் என கண்டறியப்பட்டது. பின்பு அப்பீல் செய்ய கால அவகாசம் அளிக்கப்பட்டு 19 லட்சம் பேர் என 2019 ஆம் ஆண்டு முடிவாகியுள்ளது.
தற்போது இந்த 19 லட்சம் பேரை வெளியேற்ற அல்லது குடியுரிமை பட்டியலில் இருந்து அரசு நீக்க முயலும் என்பதால் தற்போதே இதனை எதிர்த்துபோராட்டம் நடத்தி நிறுத்த முயற்சிக்கிறது. தற்போது கொண்டு வரப்பட்ட குடியுரிமை திருத்த சட்ட மசோதா மூலம் ஏற்கெனவே கண்டறியப்பட்ட 19 லட்சம் வெளிநாட்டவர்கள் மீண்டும் குடியுரிமை பெற்று விடுவார்கள் என்ற அச்சம் சட்டம் காரணமாகவே இந்த எதிர்ப்பு போராட்டம் தீர்விரமாகி உள்ளது. சட்ட திருத்தத்தில் பிற நாட்டு அகதிகளுக்கு குடியுரிமை வழங்குவதன் மூலம் தங்களின் சிறுபான்மையினராக ஆகிவிடும் என்ற அச்சத்தில் புதிய சட்டத்தை எதிர்க்கிறார்கள்.