8 தடுப்பூசிகள் 4 சிகிச்சைகளுடன் தயார்

பாரதத்தின் மத்திய மருந்துகள் தரக்கட்டுப்பாட்டு அமைப்பு (CDSCO) இரண்டு புதிய தடுப்பூசிகள் மற்றும் கொரோனாவுக்கு எதிரான தடுப்பு மருந்துகளுக்கு கட்டுப்பாடுகளுடன் கூடிய அவசரகால பயன்பாட்டு அங்கீகாரத்தை வழங்கியுள்ளது. இதன்மூலம், பாரதம் தற்போது அங்கீகரிக்கப்பட்ட எட்டு தடுப்பூசிகள் மற்றும் நான்கு சிகிச்சை முறைகளுடன் கொரோனாவுக்கு எதிரான போரில் தயார் நிலையில் உள்ளது.

தடுப்பூசிகள்: ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் சீரம் நிறுவனம் இணைந்து தயாரித்த ‘கோவிஷீல்டு’, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் தேசிய வைராலஜி நிறுவனத்துடன் இணைந்து பாரத் பயோடெக் உருவாக்கிய ‘கோவாக்சின்’, ஹைதராபாத்தை சேர்ந்த பயோலாஜிக்கல் இ நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட ‘கார்பேவாக்ஸ்’, சைடஸ் காடிலா தயாரித்த டி.என்.ஏ தடுப்பூசியான ‘சைகோவ் டி’, ரஷ்யாவின் கமலேயா ஆராய்ச்சி நிறுவனம் உருவாக்கிய ‘ஸ்புட்னிக் வி’, அமெரிக்காவை சேர்ந்த மாடர்னா நிறுவனத் தயாரிப்பான ‘மாடர்னா’ தடுப்பூசி, அமெரிக்காவின் ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் தயாரித்த ‘ஜான்சன் & ஜான்சன்’ தடுப்பூசி, அமெரிக்க நிறுவனமான நோவாவேக்ஸ் தயாரித்த ‘கோவாவேக்ஸ்’

சிகிச்சைகள்: பாரதத்தின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்துடன் (டி.ஆர்.டி.ஓ) இணைந்து டாக்டர் ரெட்டிஸ் நிறுவனம் உருவாக்கிய ‘2 டியோக்சி டி குளுக்கோஸ்’ என்ற ‘2டிஜி’ மருந்து, அமெரிக்க நிறுவனமான மெர்க்’ஸ் தயாரித்த ‘மோல்னுபிர்வார்’ வைரஸ் பெருக்கத் தடுப்பு மருந்து, சுவிஸ் மருந்து நிறுவனமான ரோச் உருவாக்கிய  டோசிலிசுமாப் நோயெதிர்ப்புத் தடுப்பு மருந்து, ரோச் நிறுவனம் உருவாக்கிய மர்றொரு தடுப்பு மருந்தான ‘ரீஜென் கோவ் 2’.