6 ஜி தொழில்நுட்பம்

மத்திய தகவல் தொடர்புத்துறை இணை அமைச்சர் தேவுசின் சௌஹான், ‘புதிய 6 ஜி 2028ல் தொழில்நுட்பத்தை உலகம் அறிமுகப்படுத்துகையில் பாரதமும் அதில் முக்கிய பங்காற்ற வேண்டும் என விரும்புகிறது.  இதற்கு அரசு, தொலைத்தொடர்பு நிறுவனங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள், கல்வியாளர்கள் இணைந்து பணிபுரிய வேண்டும். இதற்கான தொழில்நுட்பம், புத்தாக்கம், தரப்படுத்துதல் போன்றவற்றை உருவாக்க நம்மிடம் ஒருங்கிணைந்த முயற்சி தேவை.  6 ஜி’யை நாட்டின் எவ்வாறு வளர்ச்சிக்கு பயன்படுத்த முடியும் என சிந்திக்க வேண்டும். பாரதத்திற்கென அதன் சொந்த பார்வை தேவை. 6 ஜி குறித்த பணிக்குழு அடுத்த மாதம் ஆய்வுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 5 ஜி தொழில்நுட்பம் செயல்படத் தொடங்க உள்ள நிலையில் உலக நாடுகள் இப்போதே அடுத்தகட்டமான 6 ஜி குறித்து தீவிரமாக சிந்திக்கத் தொடங்கிவிட்டன.  இந்த ஆண்டு இறுதியில் 5ஜி அலைக்கற்றையை பாரதம் ஏலம் விடும் என எதிர்பார்க்கப்படுகிறது’ என்று தெரிவித்தார்.