பிரதமர் நரேந்திர மோடி, உத்தர பிரதேசம் லக்னோவில் ‘சுதந்திரம் 75 – புதிய நகர்ப்புற பாரதம்’ நிகழ்ச்சியையும் கண்காட்சி துவக்கம், பிரதமர் ஆவாஸ் யோஜனா வீடுகள் கட்டும் திட்டத் துவக்கம், ஸ்மார்ட் சிட்டி மற்றும் அம்ருத் திட்டத்தின் கீழ், 75 நகர்ப்புற வளர்ச்சி திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டுதல், கட்டி முடிக்கப்பட்ட வீடுகளை பயனாளர்களிடம் ஒப்படைத்தல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், ‘2014க்கு முன்பு 14 லட்சம் வீடுகள் மட்டுமே மக்களுக்கு கொடுக்கப்பட்டன. 2014க்கு பிறகு பா.ஜ.க ஆட்சியில், பிரதமர் ஆவாஸ் திட்டத்தின் கீழ் 1 கோடியே 13 லட்சம் வீடுகள் கட்டுவதற்கு அனுமதி வழங்கப்பட்டது. அதில் 50 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு ஏழைகளுக்கு வழங்கப்பட்டும் விட்டது. பிரதமர் ஆவாஸ் யோஜனமா திட்டத்தின் கீழ் ஏழைகளின் வங்கி கணக்குகளில் 11 கோடி ரூபாயை மத்திய அரசு செலுத்தி உள்ளது’ என தெரிவித்தார்.