5 கமாண்டோ பட்டாலியன்கள்

புதிய கமாண்டோ பட்டாலியன்களை அமைப்பதற்காக ரூ. 839.95 கோடி நிதியை ஒதுக்குவதற்கு அஸ்ஸாம் மாநில முதல்வர் டாக்டர் ஹிமந்த பிஸ்வா சர்மா தலைமையில் நடைபெற்ற அம்மாநில அமைச்சரவைக் கூட்டம் ஒப்புதல் அளித்துள்ளது. ஹைலகண்டி, கர்பி ஆங்லாங், சிவசாகர், பிஸ்வநாத் மற்றும் சடியா ஆகிய மாவட்டங்களில் இந்த புதிய கமாண்டோ பட்டாலியன்கள் அமைக்கப்படும். இந்த பட்டாலியன்கள் முக்கிய பகுதிகளில் நிலைநிறுத்தப்பட்டு, அஸ்ஸாம் காவல்துறையின் குற்றங்களைக் கையாளும் திறன்களை மேம்படுத்தும். கிளர்ச்சிக்கு எதிரான நடவடிக்கைகளில் முக்கியப் பங்கு வகிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனுடன், தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழகம் அமைப்பது, அசாம் வளாகம் நிறுவுதல், பொருளாதார நலிந்த பிரிவினருக்கான மாற்றியமைக்கப்பட்ட அளவுகோலின்படி, ரூ. 8 லட்சத்திற்கு கீழ் வருமானம் உள்ளவர்களுக்கு கிராமங்களில் 10 ஏக்கர் விவசாய நிலங்கள், நகர்ப்புறங்களில் 0.6 ஏக்கர் நிலம், கார்ப்பரேஷன் பகுதிகள் 8,640 சதுர அடி நிலம் மற்றும் 2,000 சதுர அடி கட்டடத்திற்கு பொருளாதார நலிவடைந்த பிரிவு சான்றிதழ் வழங்குதல்” ஆகிய திட்டங்களுக்கும் அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.