தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை காரைக்குடியில் செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘ராகுலின் பாதயாத்திரை ஒரு கபட நாடகம். அவரை காங்கிரஸ் கட்சியின் தலைவராக்குவதற்குதான் இந்த யாத்திரை. பாரதத்தை ஒற்றுமையாக இணைப்பதற்காக பாத யாத்திரை செல்வதாக ராகுல் காந்தி செல்கிறார். பிரதமர் மோடியின் ஆட்சியில் பாரதம் முழுமையாக இணைந்துள்ளது. நாடு பெற்றுள்ள வளர்ச்சியை தனது யாத்திரையின்போது ராகுல் அறிந்துகொள்வார். காங்கிரஸ் கட்சியில் ஒரு குடும்பத்திற்கு ஒரு பதவி என்றனர். ஆனால் அங்கு இன்று நடப்பது என்ன? இதுதான் காங்கிரஸ். அவர்களது பேச்சு வேறு செயல் வேறு. ராகுல் காந்தி காங்கிரஸ் கட்சியின் தலைவராக வருவது காங்கிரஸ் கட்சிக்கு நல்லதாக இருக்கலாம், அதே நேரத்தில் பா.ஜக.வுக்கு அது அதைவிட நல்லது. ராகுல் காங்கிரஸ் கட்சி தலைவரானால் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க 450 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும்’ என கூறினார்.