பாதிரிகளால் 4,000 குழந்தைகள் துஷ்பிரயோகம்

போர்த்துகீசிய கத்தோலிக்க சர்ச்சில் உள்ள கிறிஸ்தவ பாதிரிகளால் 4,000க்கும் மேற்பட்ட குழந்தைகள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குழந்தை மனநல மருத்துவர் பெட்ரோ ஸ்ட்ரெக்ட் இந்த அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார். கடந்த எழுபது வருடங்களின் புள்ளிவிவரங்களை அவர் வெளியுலகுக்குத் தெரியப்படுத்தினார். மேலும், இந்த புள்ளிவிவரங்கள் பனிப்பாறையின் ஒரு சிறிய முனை மட்டுமே என்று அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

செய்திகளின்படி, குற்றவாளிகளில் பெரும்பாலோர் பெரியவர்கள் என்றும் அவர்களின் பாலியல் வெறிக்கு பலியானவர்களில் பெரும்பாலானவர்கள் சிறுவர்கள் என்றும் தெரிய வந்துள்ளது. கத்தோலிக்க கிறிஸ்தவ பள்ளிகள், சர்ச்சுகள், பாதிரிகளின் வீடுகள் மற்றும் பாவ மன்னிப்பு ஒப்புதல் வாக்குமூலங்கள் வழங்கும் இடங்களில் அவர்கள் துஷ்பிரயோகம் செய்யப்பட்டனர். பத்து முதல் பதினான்கு வயது வரையிலான குழந்தைகள் இந்த பாலியல் வன்முறையால் பாதிக்கப்பட்டனர். பாதிரி என்ற போர்வையில் இரண்டு வயது குழந்தை கூட மானபங்கப்படுத்தப்பட்டுள்ளது என அவர் கூறினார்.

இதில் பெரும்பாலான குற்றங்கள் சர்ச்சுகளின் மிக உயர்ந்த பதவிகளில் உள்ளவர்களால் செய்யப்படுகின்றன. பின்னர் அந்த குழந்தைகள் மீண்டும் மீண்டும் அச்சுறுத்தப்பட்டு பாலியல் சுரண்டலுக்கு ஆளாகின்றனர். கடந்த ஆண்டு இது குறித்த முக்கிய தகவல்கள் வெளியாகின. குற்றம் சாட்டப்பட்ட பாதிரிகளின் பட்டியல் தயாரிக்கப்பட்டு வருவதாக குழந்தைகள் ஆணையம் தெரிவித்துள்ளது. இதன் ஒரு கட்டமாக விசாரணையின் ஒரு பகுதியாக பலரது சாட்சிய அறிக்கைகள் அனுப்பப்பட்டுள்ளதாக ஆணையம் தெரிவித்துள்ளது. எனினும் 20 வருடங்களுக்கு முன்னர் நடைபெற்ற குற்றச் செயல்களுக்கு தற்போது சட்ட நடவடிக்கை எடுக்க முடியாது எனவும் புதிய சட்டத்தின் பிரகாரம் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. (உள்ளீடு – Indusscrolls)