ஒரு வினாடிக்கு 4 ஸ்கூட்டர்கள்

ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் தன் விற்பனையை ஆரம்பித்த ஒரே நாளில் ரூ. 600 கோர் மதிப்புள்ள மின்சார இருசக்கர வாகனங்களை விற்றுள்ளது. அதாவது ஒவ்வொரு வினாடியும் 4 ஸ்கூட்டர்கள் என்ற அளவில் இந்த விற்பனை இருந்துள்ளது. ஜூலை மாதம் இந்நிறுவனம் அறிவித்த மின்சார ஸ்கூட்டர் முன்பதிவு காலத்தில் முதல் 24 மணி நேரத்திற்குள் 1 லட்சம் முன்பதிவுகளைப் பெற்று சாதனை படைத்துள்ளது. இது உலகிலேயே அதிக முன்பதிவு செய்யப்பட்ட ஸ்கூட்டர் என்ற பெருமையை பெற்றுள்ளது. முன்பதிவு செய்தவர்களுக்கு வாகன டெலிவரி அக்டோபர் 2021 முதல் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.