மகாராஷ்டிர மாநிலம் பால்கர் மாவட்டத்தின் தஹானுவில் பழங்குடியினப் பெண்ணை வலுக்கட்டாயமாக மதம் மாற்ற முயன்றதற்காக நான்கு மிஷனரிகள் கைது செய்யப்பட்டனர். கிறிஸ்தவ மதத்தைத் தழுவினால் அந்த பெண்ணின் பிரச்சனைகள் தீர்ந்துவிடும் என்று பணத்தைப் பயன்படுத்தி அந்தப் பெண்ணை ஏமாற்ற முயன்றனர். கைது செய்யப்பட்ட மிஷனரிகள் கிளமென்ட் டி’பெல்லா, மரியமா டி பிலிப்ஸ், பரம்ஜீத் என்ற பிங்கி ஷர்மா கவுர் மற்றும் பரசுராம் தர்ம திங்க்ரா என அடையாளம் காணப்பட்டுள்ளனர். கிராம மக்கள் அந்த சுவிசேஷகர்களை பிடித்து காவல்துறையில் ஒப்படைத்தனர். அவர்கள் நான்கு பேர் மீதும் வலுக்கட்டாயமாக மதமாற்றம் செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தஹானு, தலசேரி, ஜவ்ஹர், விக்ரம்காத் உள்ளிட்ட பால்கர் மாவட்டத்தின் பழங்குடியினர் வசிக்கும் பகுதிகள் நீண்ட காலமாக மதமாற்ற நடவடிக்கைகளில் கிறிஸ்தவ சுவிசேஷகர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதைத்தவிர, பால்கர் மாவட்டத்தில் உள்ள பல கிராமங்களில் பழங்குடியின மக்கள் அதிகம். அதனை பயன்படுத்தி கிறிஸ்தவ அம்மைப்புகளும் இடதுசாரி நக்சல் பயங்கரவாதிகளும் இப்பகுதியில் பல்வேறு சமூகவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். முன்னதாக கடந்த ஏப்ரல் 2020ல் இதே பால்கர் பகுதியில், ஹிந்து சாதுக்கள் மற்றும் அவர்களின் ஓட்டுநரை கொடூரமாக அடித்துக் கொன்றதில் இடதுசாரி அமைப்புகள் மற்றும் கிறிஸ்தவ மிஷனரிகள் ஈடுபட்டதை விவேக் விசார் மஞ்ச் அமைத்த ஒரு சுயாதீன உண்மை கண்டறியும் குழு உறுதிப்படுத்தியது நினைவு கூரத்தக்கது.