சி.ஐ.ஐ., எனப்படும் இந்திய தொழிற்சாலைகள் கூட்டமைப்பின் ஆண்டு கூட்டத்தில், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பேசியபோது ‘நாட்டில் 3 முதல் 22 வயதுக்குட்பட்டவர்களின் எண்ணிக்கை 50 கோடிக்கு மேல் உள்ளது. ஆனால், அரசு – தனியார் பள்ளிகள், உயர் கல்வி நிறுவனங்கள் என அனைத்து கல்வி நிறுவனங்களிலும் சேர்ந்துள்ளவர்களின் எண்ணிக்கை 35 கோடிதான். எனவே, 15 கோடிக்கும் அதிகமானோர் அடிப்படை தேவையான எழுத்தறிவு உட்பட முறையான கல்வியறிவு பெறாமல் உள்ளனர். அவர்களையும் கல்வியறிவு பெற வைக்க வேண்டும் என்பதே அரசின் லட்சியம்’ என தெரிவித்தார்.