பங்கு வர்த்தகம், ரியல் எஸ்டேட் துறைகளைல் ஈடுபட்டுள்ள கார்வி குழுமம், சுமார் 2,800 கோடி ரூபாய் மதிப்புள்ள அதன் வாடிக்கையாளர்களின் பங்குகளை சட்டவிரோதமாக அடகு வைத்து அதிக அளவில் கடன் பெற்றதாக, வங்கிகளின் புகார்களின் அடிப்படையில், CCS ஹைதராபாத் காவல்துறை தாக்கல் செய்த வழக்குகளின் அடிப்படையில் பணமோசடி வழக்கை அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது. இவ்வழக்கில் தற்போது அந்த நிறுவனத்துக்கு சொந்தமான 110.70 கோடி ரூபாய் மதிப்பிலான மதிப்புள்ள நிலங்கள், கட்டிடங்கள், பங்குகள், பணம், வெளிநாட்டு நாணயம் மற்றும் நகைகள் போன்ற சொத்துக்களை தற்காலிகமாக முடக்கியுள்ளது. இதன் மூலம் இந்த வழக்கில் இதுவரை மொத்தம் ரூ. 2,095 கோடி இணைக்கப்பட்டுள்ளது. மேலும் விசாரணை நடந்து வருகிறது. இந்த நிறுவனத்தின் நிர்வாகிகளான சி. பார்த்தசாரதி, ஜி. ஹரி கிருஷ்ணா ஆகியோர் அமலாக்கத்துறையால் ஏறகனவே கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் உள்ளனர்.