காங்கிரஸ் தலைவர் ராகுல், காடந்த பிப்ரவரி 10ம் தேதி தனது டுவிட்டர் பதிவில், பாரதம் குறித்தும் அதன் மாநிலங்கள் குறித்தும் வெளியிட்ட பதிவில், ‘காஷ்மீர் முதல் கேரளா வரை, குஜராத் முதல் மேற்கு வங்காளம் வரை பாரதம் உள்ளது’ என தெரிவித்திருந்தார். இது கடும் சர்ச்சையை கிளப்பியது. பா.ஜ.க தலைவர்கள், வடகிழக்கு மாநில முதல்வர்கள் என பலரும் அவரை கண்டித்துள்ளனர். அவர் திட்டமிட்டே அசாம், அருணாசல பிரதேசம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களை தவிர்த்துள்ளார், சீனாவுக்கு ஆதரவாக செயல்படுகிறார் என சமூக ஊடகங்களிலும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், ராகுலின் இந்த பிரிவினை வாத கருத்தை முன்னிட்டு, அவர் மீது குறைந்தபட்சம் ஆயிரம் தேசத்துரோக வழக்குகளையாவது பதிவு செய்ய வடகிழக்கு மாநில மக்கள் உத்தேசித்துள்ளனர் என ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.