காஞ்சிபுரம் வரதராஜப் பெரு மாள் கோயிலில் தினம்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் அத்திவரதரை தரிசனம் செய்து வருகின்றனர். இதையடுத்து அத்திவரதர் சயனக் கோலத்தில் காட்சி தரும் நிகழ்வு இன்றுடன் நிறைவு பெறுகிறது.
நாளை முதல் நின்ற கோலத்தில் அத்திவரதர் பக்தர்களுக்கு காட்சி அளிக்கவுள்ளார். இதையொட்டி இன்று நண்பகல் 12 மணியுடன் கிழக்கு கோபுரக் கதவுகள் மூடப் படும். மாலை 5 மணியுடன் தரிசனம் நிறைவடைகிறது.
அத்திவரதரை காணவரும் பக்தர் கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பதால் அவர்கள் இளைப் பாறிச் செல்வதற்கான கொட்ட கைகள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. வரிசையில் நீண்ட நேரம் காத்திருக்கும் பக்தர்கள் இளைப்பாறும் வகையில், 10 ஆயிரம் பேர் அமரும் வகையில் பெரிய கொட்டகை அமைக்கப்பட்டு வருகிறது. கோயிலுக்கு அருகில் உள்ள அண்ணா அவென்யூ, வாழைத்தோப்பு ஆகிய 2 இடங் களில் இந்த கொட்டகை அமைக் கும் பணி நடைபெற்று வருகிறது.