கோடீஸ்வரர் பட்டியலில் கேரளா பைஜூ ரவிந்திரன்

பள்ளி ஆசிரியராக இருந்த, கேரளாவைச் சேர்ந்த, பைஜு ரவிந்திரன், 37, நாட்டின் மிகப் பெரிய கோடீஸ்வரர்கள் பட்டியலில் இணைந்துள்ளார்.

பாடங்கள் கற்றுத் தரும், ‘பைஜு’ என்ற, ‘மொபைல் ஆப்’பை உருவாக்கியவர், கேரளாவைச் சேர்ந்த, பைஜு ரவிந்திரன். கடந்த, 2011ல், ‘திங்க் அண்ட் லர்ன்’ என்ற நிறுவனத்தை துவக்கி, ஆன்லைன் மூலமாக பாடங்களை கற்பித்து வந்தார். 2015ல், பைஜு என்ற, மொபைல் ஆப் அறிமுகம் செய்தார்.இந்த ஆப் மூலம், மாணவர்கள் பாடங்களை சுலபமாக கற்க முடியும்.

மாணவர்களை ஈர்க்கும் வகையில், எளிய விளக்கங்களுடன் உள்ள, இந்த மொபைல் ஆப்பை, 35 லட்சம் பேர் பயன்படுத்துகின்றனர்.

சமீபத்தில் இவருடைய நிறுவனம், 1,000 கோடி ரூபாய் மதிப்புள்ள முதலீட்டை பெற்றுள்ளது. இதன் மூலம், இந்த நிறுவனத்தின் மொத்த மதிப்பு, 39.21 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இந்த நிறுவனத்தில், பைஜு ரவிந்திரனுக்கு, 21 சதவீத பங்குகள் உள்ளன.சொந்த முயற்சிதற்போது, நாட்டின் மிகப் பெரிய கோடீஸ்வரர்கள் பட்டியலில், பைஜு ரவிந்திரன் இணைந்துஉள்ளார். சொந்த முயற்சியில் தொழில் துவங்கிய, ஏழு ஆண்டுகளுக்குள், இந்த முன்னேற்றத்தை அவர் கண்டுள்ளார்.

கேரளாவின் ஆழிக்கோடில் பிறந்த இவர், இன்ஜினியரிங் படித்த பின், அங்குள்ள பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். பின், பல்வேறு நுழைவுத் தேர்வுகளுக்கு மாணவர்களை தயார் செய்ய பயிற்சி அளித்து வந்தார். அதைத் தொடர்ந்தே, ஆன்லைன் மூலமாக பாடங்கள் எடுக்க துவங்கினார்.