கொடைக்கானலில், மருத்துவ குணம் நிறைந்த மலைப்பூண்டு சாகுபடி செய்யப்படுகிறது. சுற்றி யுள்ள மலைக்கிராமங்களான மன்னவனூர், வில்பட்டி, பள்ளங்கி, பூண்டி, கிளாவரை, கவுஞ்சி உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் பூண்டு விவசாயம் அதிக அளவில் உள்ளது.
பொதுவாக தமிழகத்தில் பூண்டு, காரிஃப் எனப்படும் ஜூன், ஜூலை மாதங்களிலும் ராஃபி எனப் படும் அக்டோபர், நவம்பர் மாதங்களிலும் விளைவிக்கப்படும். ஆனால் கொடைக்கானல் மலைப் பூண்டு ஆண்டுக்கு இருமுறை செப்டம்பர்- அக்டோபர் மாதங்களி லும் ஏப்ரல், மே மாதங்களிலும் அதிகமாக விளையும்.
இந்த மலைப்பூண்டு திண்டுக் கல், வத்தலகுண்டு மற்றும் பெரிய குளம் சந்தைக்கு விற்பனைக்கு கொண்டுவரப்பட்டு பின்னர் தமிழகம் மட்டுமின்றி வெளிநாடு களுக்கும் ஏற்றுமதி செய்யப்படு கிறது.
மலைப்பூண்டு ரசம் உடல் சோர்வை நீக்கி புத்துணர்ச்சி பெறுவதற்கும், உடல் எடையைக் குறைப்பதற்கும், உடல் ஜீரணத் துக்கும் அதிகளவில் பயன்படுத்தப் படுகிறது.
இத்தகைய சிறப்பு வாய்ந்த மலைப்பூண்டின் தனித்தன்மை மற்றும் பாரம்பரியத்தைக் காக்க புவிசார் குறியீடு வழங்கக்கோரி கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக உயிரி தொழில்நுட்பத்துறையும் தமிழ் நாடு அறிவியல் தொழில்நுட்ப கவுன்சிலும் கடந்த 2018-ம் ஆண்டு மத்திய அரசுக்கு விண்ணப்பித்து இருந்தது. அதன்பலனாக தற் போது கொடைக்கானல் மலைப் பூண்டுக்கு புவிசார் குறியீடு கிடைத் துள்ளது.
தமிழகத்தின் மதுரை மல்லி, ஈத்தாமொழி நெட்டை தென்னை, ஈரோடு மஞ்சள், நீலகிரி தேயிலை, சிறுமலை வாழைப்பழம், விருப் பாச்சி மலை வாழைப்பழம் ஆகியவற்றுக்கு ஏற்கெனவே புவிசார் குறியீடு பெறப்பட்டுள்ளன. இந்த வரிசையில் தற்போது கொடைக்கானல் மலைப்பூண்டும் சேர்ந்துள்ளது. இதன்மூலம் உலக அளவில் இனி பிரபலமடையும் என்பதால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.