வேளச்சேரி, குருநானக் கல்லுாரியில், 11வது ஹிந்து ஆன்மிக சேவை கண்காட்சி, நேற்று துவங்கியது. .முதல் நாள் நிகழ்வாக, ‘ஜீவ ராசிகளை பேணுதல்’ எனும் தலைப்பில், கோ, கஜ, துளசி பூஜை நடந்தது.இதில், ஏராளமான பள்ளிகளைச் சேர்ந்த மாணவ – மாணவியர் பங்கேற்றனர்.இதையடுத்து, மேதா தட்சிணா மூர்த்தி ஹோமம், பண்பு சார்ந்த ஹோமங்கள், வள்ளலார் அகவல், இளைஞர்களுக்கான போட்டிகள் நடந்தன.மதியம், 1:15 மணி முதல், பள்ளிகளின் கலாசார நிகழ்ச்சிகள் நடந்தன. அதைத்தொடர்ந்து கர்நாடக நாட்டுப்புறக் கலைகள் நடந்தன. நேற்று மாலை, 4:15 மணி முதல் ஹிந்துஸ்தானி பஜன், குஜராத்தி சமூக பாரம்பரிய கலைகள், மராட்டிய சமூக அபங்க் பஜன் ஆகியவை அரங்கேறின.