ஹிந்துக்களே ஓட்டுப் போடும் போது உஷார்!

ஹிந்து வாக்குகள் ஹிந்துக்களுக்கே என்கின்ற கோஷம் பாரத தேசத்தில் விண்ணை பிளக்கும் அளவுக்கு முழக்கமிட்டிருக்கும் நேரம் இது. ஹிந்து மடங்கள் பலவற்றின் பீடாதிபதிகள் விஜயபாரதம் வாசகர்களுக்கு பிரத்யேகமாக இந்நேரத்தில் சில கருத்துக்களை வழங்கி வருகிறார்கள். அந்த வரிசையில், இந்த வாரம் நமக்கு பேட்டி அளித்துள்ளார் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சடகோப ராமானுஜ ஜீயர் அவர்கள். இவர் ஸ்ரீவில்லிபுத்தூர் மணவாள மாமுனி மடத்தின்  23வது பட்டத்து ஜீயர்.

“ஹிந்துக்கள் என்போர் பூமி தொடங்கின காலத்திலிருந்தே உள்ளனர். இவ்வளவு ஏன்,  இன்றைய ரஷ்யா, ஆப்பிரிக்கா, இராக் என்றெல்லாம் உள்ள நாடுகள் ஒருகாலத்தில் இந்தியக் குடைக்கீழ் இருந்தவைதான்.  என்ன,  அவரவர்கள் தம் பங்கு என்று பிரித்துக் கொண்டு விட்டனர். ஏற்கனவே பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே நம் நாட்டில் வியாபாரம் என்று கூறி வந்த பிரிட்டிஷாரும் பிறரும் நம் செல்வங்களைக் கொள்ளையடித்தது போதும். மிச்சமிருக்கும் பாரதம் என்கின்ற பரந்த வீட்டை ஹிந்துக் களாகிய நாம் கட்டிக்காத்து போற்ற வேண்டியது அவசியம். எனவே, ஹிந்துக்களாகிய நாம் சாத்வீக குணம் பொருந்தியவர்கள். அதவாது, பிறருக்கு வழங்கி பின் சாப்பிடும் தன்மை யுள்ளவர்கள். பிறர் உணவை அபகரித்து சாப்பிடுவது, ஏமாற்றுவது போன்ற முறையே  ராஜஸ, தாமச குணங்கள் நமக்கு கிடையாது.

தவிர, நமது வீட்டிலேயே அண்ணன், தங்கை, அப்பா, அம்மா போன்றோர்களிடத்தில் கருத்து வேறுபாடுகள் பல இருந்தாலும், ஒருமித்த கருத்து ஏற்படுத்துவதன் மூலம் வேறுபாடுகளை களையும் குணம் கொண்டுள்ளோம். நமது ஒற்றுமையே நமது பலம்.  பகவான் அருளால் நாம் தோற்கடிக்கப்பட்டதில்லை.

தசரதன் ஒரு நிலையில் ராமனுக்கு முடிசூட்டிவிட்டு தான் அரசாட்சியிலிருந்து விலக நினைத்தான். ராமன் அரசுக்குப் பதிலாக ஆனந்தமாக வனம் ஏகினான். ஆனால் தனக்கு முறை தவறி வந்த ஆட்சியைப் பெற பரதன் மறுத்தான். இந்த விசித்திரத்தை நாம் உலகில் வேறு எங்கும் பார்க்கவில்லை.  இது ஒரு முன்மாதிரி- பல குழப்பங்களையும் தீய விளைவுகளையும் தடுக்கும் உத்தியாகவாவது இருக்கிறது.

முஸ்லிம்கள் சிம்மாசனத்திற்காக குழப்பம், போட்டி, கொலைதான் எப்போதும் நிலவி வந்தது. இதற்கு விதிவிலக்காக இருந்தவர்கள் ஹிந்து அரசர்கள் மட்டுமே!

பதவியில் இருப்போர்கள் பணிவுடன் இருக்கவேண்டும். “பெருக்கத்து வேண்டும் பணிவு”. ஆனால் நல்லாட்சி தந்து கொண்டிருக்கும் மோடி அரசை தூக்கி எறிவது ஒன்றையே லக்ஷியமாகக் கொண்ட பல கட்சிகளின் கூட்டணி அமைத்து ஜனநாயகம் என்று கூப்பாடு போடும் எதிர்க்கட்சிகளிடம் நாட்டை ஒப்படைத்தால் என்ன ஆகும்?   இந்த தாற்காலிக கூட்டணிக்கு நாட்டு மக்களின் நல்வாழ்க்கை, பொருளாதார முன்னேற்றம், நாட்டின் பாதுகாப்பு, மக்களின் பாதுகாப்பு பற்றி யெல்லாம் அக்கறை இல்லை.

இவர்கள் அசோக சக்ரவர்த்தியின் தந்தை பிந்துசாரரையே கொல்ல வந்த அவரது மனைவி களில் ஒருத்தி போன்ற தன்மையுடையவர்கள்.(பிந்துசாரரின் இன்னொரு மனைவி சாத்விகி). கொல்லத் துணிந்த அவள் இறுதியில் அவளது ஆட்களாலேயே கொல்லப்பட்டாள்.

நாடு பற்றி கவலை எல்லாம் இந்த கட்சிகளுக்கு இல்லை.

அடுத்த மாதம் நாடு முழுவதும் நடை பெறும் நாடாளுமன்றத் தேர்தலில் மோடி தலைமையிலான பாரதீய  ஜனதா கட்சியையும் அதன் தோழமைக்கட்சிகளையும் வாக்காளர்கள் ஆதரிக்க வேண்டிய நேரம் இது.

ஐந்து வருடத்திற்கு ஒரு முறை கிடைக்கும் இந்த அரிய வாய்ப்பை ஹிந்துக்கள் அனைவரும் நன்கு புரிந்து கொண்டு ஓட்டுப் போட்டு, பாரத தேசத்தைக் காக்கும் வேள்வியில் அனைவரும் பங்கேற்போம்!