கன்ஹையா லால் மற்றும் உமேஷ் கோஹ்லே ஆகியோர், முன்னாள் பா.ஜ.க தலைவர் நூபுர் சர்மாவை ஆதரித்ததற்காக முஸ்லிம் பயங்கரவாதிகளால் கொடூரமாகக் கொல்லப்பட்டனர். மேலும், பல்வேறு தாக்குதல் கொலை முயற்சி சம்பவங்களும் ஹிந்துக்கள் மீது நடத்தப்பட்டுள்ளன. நாடு முழுவதும் ஹிந்துக்கள் மீதான தொடர் தாக்குதல்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், முஸ்லிம் அடிப்படைவாதிகளால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் ஹிந்து சமூகத்திற்கு உதவும் நோக்கில் விஷ்வ ஹிந்து பரிஷத் மற்றும் பஜ்ரங் தள ஆர்வலர்கள் ஹெல்ப்லைன் எண்களைத் தொடங்கியுள்ளனர். கர்நாடகா, உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், ஹிமாச்சலப் பிரதேசம், டெல்லி, பீகார், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் வி.ஹெச்.பி மற்றும் பஜ்ரங் தளம் ஹெல்ப்லைன் எண்களை வழங்கியுள்ளது. சமூக ஊடகப் பதிவுகள் மூலம் அச்சுறுத்தல்கள் அல்லது அலைபேசி அழைப்புகள் வந்தால், அதுகுறித்து காவல்துறையிடம் புகார் அளிக்க ஹிந்துக்கள் விரும்பினால் அவர்களுக்கு உதவ இந்த ஹெல்ப்லைன் எண்களை அனுகலாம். வி.ஹெச்.பி அல்லது பஜ்ரங்தளத்திடம் இருந்து ஹிந்து சமுதாய மக்கள் ஏதேனும் உதவியை நாடினால், அவர்களுக்கு அனைத்து உதவிகளையும் வழங்க தயாராக உள்ளோம் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.