ஹல்திகாட் – 450 வெற்றி வரலாறு

பொதுவாக வரலாற்றில் பல உண்மைக்குப் புறம்பான தகவல்கள் இடம் பெற்றுள்ளன. தவறுகள் பல திருத்தப்பட்டுள்ளன, எனினும் இது முழு அளவில் மேற்கொள்ளப்பட்டுவிட்டது என்று கூறமுடியாத நிலையே காணப்படுகிறது.
‘அக்பர் தி கிரேட்ஸ்’ என்று தான் பெரும்பாலான பாடப் புத்தகங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது உண்மைக்குப் புறம்பானது. முகலாயர்களின் கீர்த்தியை உயர்த்திப் பிடிப்பதற்காக எண்ணற்ற புனைவுகளை, உண்மையைப் போல சேர்த்துவிட்டனர்.
முகலாயர்களை வீழ்த்தியதில் மாகாராணா பிரதாப் சிங்கிற்கு முக்கிய இடம் உண்டு. ஆனால் இந்த உண்மை பெரும்பாலும் இருட்டடிப்பு செய்யப்படுகிறது. அக்பர்தான் மகத்தானவர், என்ற மலிவான பிம்பம் கட்டமைக்கப்பட்டுள்ளது. ஆனால் உண்மையில் மாகாராணா பிரதாப் தான் மகத்தானவர். வரலாற்று சாதனைகளை நிறுத்தியவர்
மகாராணா பிரதாப் போர் கலையில் வித்தகம் பெற்றவர். எந்த இடத்தில், எத்தகைய போர் முறையை உபயோகிக்க வேண்டும் என்பதில் நிபுணத்துவம் வாய்ந்தவர்.
முகலாயர்களை மகாராணா பிரதாப் விரட்டியடித்தது மகத்தான வரலாற்றுச் சாதனையாகும். முகலாயர்களை, 1576 ஆம் ஆண்டு ஜுன் 18 ஆம் தேதி, ஹல்திகாட்டில் மகாராணா பிரதாப் விரட்டியடித்தார்
இந்த ஹல்திகாட் போர், இந்த அளவு குறிப்பிட்ட சில மாநிலங்களுக்கு வெளியே நன்கு வெளிச்சப்படுத்தப்படவில்லை. அதனுடைய 450ம் ஆண்டு இந்த வருடம் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ். அகில பாரத தலைவர் மோகன்ஜி பாவகத் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.
முகலாயப் படையில் லட்சத்திற்கும் மேற்பட்ட வீரர்கள் இருந்தார்கள். ஆனால் மகாராணா பிரதாப் படையில், சுமார் 25,000 போர் வீரர்கள் மட்டுமே இருந்தனர். கொரில்லா போர் முறையை பயன்டுத்தி, முகலாயர்களை மகாராணா பிரதாப்சிங் விரட்டியடித்தார்.
ஹல்திகாட் போர் இன்றளவும் மக்களால் நினைவு கூறப்படுகிறது. இந்த பகுதி ரத்தக்குளம் என்றே குறிப்பிடப்படுகிறது.
ஹல்திகாட் போர் இன்றளவும் சர்வதேச அளவில் பேசுப் பொருளாகவே உள்ளது. குறைந்த எண்ணிக்கையிலான போர் வீரர்களை கொண்ட மகாராணா பிரதாபின் படை, அதிக அளவிளான போர் வீரர்களை கொண்ட முகலாயர் படையை துரத்தி அடித்தது சாதாரண விஷயமல்ல. மகாராணா பிரதாப் முகலாயர்களை விரட்டியடித்தது மற்றொரு வகையிலும் முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனெனில் முகலாயப்படையை தலைமையேற்று நடத்தியது ராஜா மான்சிங் ஆவார். இத்தகைய துரோகிகள் எல்லா காலத்திலும் இருந்துள்ளனர் என்பதையும், இது எடுத்துக்காட்ட தவறவில்லை.
இத்தருணத்தில் மகாராணா பிரதாபின் குதிரை `சேட்டக்’ ஆற்றிய பணியையும் நினைவு கூற வேண்டியது அவசியம். மகாராணா பிரதாபை காப்பதற்காக, சேட்டக் எல்லா உதவிகளையும் செய்தது, போர்க்களத்திலேயே அதன் உயிர் பிரிந்தது.
மகாராணா பிரதாப் பராக்கிரமம் மிக்க மன்னராக மட்டுமல்லாமல், மக்களின் குறைகளை உடனுக்குடன் தீர்க்கும் சிறந்த ஆட்சியாளராகவும் செயல்பட்டுள்ளார் என்பதே அவரது சிறப்புக்கு அடித்தளமாக உள்ளது.

கட்டுரையாளர் : ராஜஸ்தான் மாநில சட்டமன்ற சபாநாயகர்
ஆர்கனைசர் ஆங்கில வார இதழிலிருந்து தமிழில் : நிகரியவாதி