ஹபிஸ் சையத், மசூத் அசாரை தனி தீவிரவாதிகளாக இந்தியா அறிவித்த முடிவுக்கு அமெரிக்கா ஆதரவு

ஹபிஸ் சையத், மசூத் அசார், தாவூத் இப்ராகிம் ஆகியோரை தனி தீவிரவாதிகளை இந்தியா அறிவித்துள்ளதை அமெரிக்கா ஆதரித்துள்ளது.

சட்டவிரோத தடுப்பு நடவடிக்கைகள் சட்டத்தின்படி ஜெய்ஷ் இ முகமது தலைவர் மசூத் அசார், லஷ்கர் இ தொய்பா அமைப்பின் தலைவர் ஹபிஸ் முகமது சயீத், தாவூத் இப்ராஹிம் ஆகியோரை அமைப்புகளுடன் சேர்ந்து அறிவிக்கப்பட்டதை தவிர தனியாகவும் தீவிரவாதிகளாக இந்தியா அறிவித்தது.

மவுலானா மசூத் அசார, ஹபிஸ் முகமது சயீத் தீவிரவாதத்தில் ஈடுபட்டு வருவதாலும்,மும்பை தீவிரவாத தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்ட ஜகி உர் ரஹ்மான் லக்வி, தாவுத் இப்ராஹிம் ஆகியோரையும் சட்டவிரோத செயல்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ் அமைப்பு சாராத தனித் தீவிரவாதிகளாக அறிவிப்பதக இந்தியா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் இந்தியாவின் இந்த முடிவை அமெரிக்கா ஆதரிப்பதாகவும், இந்தியா அமெரிக்கா உறவில் தீவிரவாதத்தை எதிர்பதற்கான சாத்திய கூறுகளை விரிவுப்படுத்தும் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

சட்டவிரோத நடவடிக்கைகள் தடைச் சட்டம் 1967-ன்கீழ் திருத்தங்கள் கொண்டு வந்து நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிய ஒரு மாதத்துக்குப்பின் இவர்களை தனித் தீவிரவாதிகளாக அறிவிக்கும் முடிவை இந்தியா எடுத்துள்ளது.

முன்னதாக தீவிரவாத தடுப்பு நடவடிக்கைகளில் பாகிஸ்தான் திறம்பட செயல்படவில்லை என்று அமெரிக்கா குற்றம்சாட்டி இருந்தது. இதன் காரணமாக அந்நாட்டுக்கு வழங்கவிருந்த நிதி ரத்து செய்யப்படும் என்று அமெரிக்க கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.