வேலூர் இப்ராஹிம் குற்றச்சாட்டு

பா.ஜ.கவின் சிறுபான்மை பிரிவு தேசிய செயலாளரான வேலூர் இப்ராஹிம், பா.ஜ.கவின் மதுரை நகர் சிறுபான்மையினர் அணி சார்பில் திருப்பரங்குன்றத்தில் நடந்த மத நல்லிணக்க கலந்துரையாடலில் கலந்துகொண்டு பேசினார். அப்போது, பாரதம் முழுவதும் முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் பா.ஜ.கவில் அதிகளவில் இணைகின்றனர். இதை பொறுத்துக்கொள்ள முடியாத பயங்கரவாத, பிரிவினைவாத சக்திகளும் தேச விரோத கட்சிகளும் சிறுபான்மையினரை அச்சுறுத்துகின்றனர். தமிழகத்திலும் அதேபோன்ற நிலைதான் தொடர்ந்து கொண்டுள்ளது. தி.மு.க ஆட்சியில் முஸ்லிம்களிடம் பா.ஜ.க’வை கொண்டு செல்லும் நிர்வாகிகளுக்கு உரிய பாதுகாப்பு தருவதில்லை. முஸ்லிம் பகுதிகளுக்கு நாங்கள் செல்ல தடை விதிக்கின்றனர். சிறுபான்மை மக்கள் தாக்கப்படுவது தி.மு.க ஆட்சியில்தான் என உறுதியாக கூற முடியும். தி.மு.க ஆட்சியில் தான் அடிப்படைவாத சக்திகள் பலம் பெறுகின்றனர். இளைஞர்களை தவறாக வழி நடத்துகின்றனர்’ என்றார்.