வெற்றிகரமான அப்யாஸ்

நமது ராணுவ ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பு ‘அப்யாஸ்’ ரக அதிவேக வான் தாக்குதல் ஏவுகணையை கடந்த செவ்வாய் அன்று பாலாசோர் தளத்தில் இருந்து வெற்றிகரமாக ஏவி பரிசோதித்தது.
 இரண்டு பூஸ்டர்கள், வழிகாட்டி அமைப்பு கொண்ட இந்த ஏவுகணையை ஒரு லேப்டாப் வகை சிறிய வழிகாட்டி அமைப்பை கொண்டே இயக்கமுடியும். பரிசோதனையின் போது இந்த ஏவுகணை 20 கி.மி தூரம் 0.5 மேக் வேகத்தில் பறந்தது.
டி.ஆர்.டி.ஓ சாதனைகளில் இது ஒரு மைல்கல் என ராஜ் நாத் சிங் கூறியுள்ளார். சில தினங்களுக்கு முன் ஹைப்பர்சோனிக் ஏவுகணையை பாரதம் வெற்றிகரமாக சோதித்தது குறிப்பிடத்தக்கது.