மேடம் பிகாஜி ருஸ்தம் காமா

பலர் அறியாத சுதந்திர போராட்ட வீராங்கனை இவர். பாரத விடுதலைக்காக வெளிநாட்டில் இருந்து பாடுபட்டவர்களில் முக்கியமானவர்.

1881-ல் பம்பாயில் பணக்கார பார்ஸி குடும்பத்தில் பிறந்தார். 24 வயதில் ருஸ்தம் என்பவரை திருமணம் செய்தார். பிளேக் நோயாளிகளுக்கு தொண்டு புரிந்தார். பின் லண்டன், பாரீஸ், ஜெர்மன் என பல பகுதிகளுக்கு சென்றார். தேச விடுதலைக்காக புரட்சியாளர்களுக்கு ஆயுதங்களை வாங்கவும், பயிற்சி அளிக்கவும் உதவினார்.

1857-ல் விடுதலை எழுச்சியின் 50வது ஆண்டை கொண்டாட கூட்டம் நடத்தினார். அதில் ‘லாலா லஜ்பத்ராய், பிபின் சந்திர பால், வீர சாவர்கர், ஹர்ஷ தயாள், வ.வே.சு ஐயர்’ கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

1906-ல் கல்கத்தாவில் ஏற்றப்பட்ட சுதந்திரக்கொடியை போன்ற ஒரு கொடியை 1907-ல் தயாரித்து ஸ்டர்ட்கார்டில் ஏற்றினார். பாரீசில் பத்திரிக்கை நடத்தினார். தன் எழுத்துக்கள் மூலம் சுதந்திர போராட்டத்தை வளர்த்தார்.

மணியாச்சியில் வாஞ்சிநாதன் ஆஷ்துரையை கொல்ல பயன்படுத்திய துப்பாக்கியை அவருக்கு அனுப்பியவர் பிகாஜிதான் என்பது பலருக்கும் தெரியாது. சாவர்கர் உட்பட வெளி நாடுகளுக்கு வந்த சுதந்திர போராட்ட வீரர்கள் பலருக்கும் உதவினார்.

தன் உயிருள்ளவரை பாரத விடுதலைக்காக பாடுபட்ட அவர், தன் 74வது வயதில் உடல்நிலை கெட்டு பம்பாய் வந்தார். அங்குள்ள பாரிஸ் அறக்கட்டளை மருத்துவமனையில் சேர்ந்தார். அவரை பற்றி இங்குள்ள பலருக்கும் தெரியாத சூழலால் யாரும் கேட்பாரின்றி உயிரிழந்தார்.

பிகாஜி ருஸ்தம் காமாவின் பிறந்த தினம் இன்று

One thought on “மேடம் பிகாஜி ருஸ்தம் காமா

Comments are closed.