விஷமக்கார மிஷநரிகள்

தமிழகத்தில் படித்த அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில், 7.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கியது தமிழக அரசு. ஆனால், தங்கள் கல்வி வியாபாரம் இதனால் பாதிக்கும் என்பதால், இந்த இட ஒதுக்கீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து கத்தோலிக்க கிறிஸ்தவ கல்வி நிறுவனங்கள் உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்தனர். அதில் 7.5 சதவீதம் இட ஒதுக்கீட்டால் தங்களுக்கான உரிமைகள் பாதிக்கப்படுவதாக தெரிவித்திருந்தர். நீதிமன்றம், ‘7.5 சதவீதம் உள் ஒதுக்கீட்டுக்கு இடைக்கால உத்தரவு ஏதும் பிறப்பிக்க முடியாது’ என்று கூறியுள்ளது. சிறுபான்மையினர் என்ற பெயரில் கல்வி நிறுவனங்கள் நடத்தும் கல்வி வியாபாரிகள், அரசுப்பள்ளி மாணவர்களின் கனவை சிதைப்பது சரியல்ல. இதற்கேற்ப அரசும் நீதிமன்றமும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.