வாழை இலை வழியே ஒரு வாழ்க்கைத் தத்துவம்:- மகான்களின் வாழ்வில்

ரமண மகரிஷியின் ஆசிரமத்திற்கு ஒரு மனிதர் வந்தார். குடும்பத்தின் பிரச்சினைகள் காரணமாக அவர் குழப்பத்தில் இருந்தார். தற்கொலை செய்துகொள்ளும் எண்ணம் அவ்வப்போது அவருக்கு எழுந்துகொண்டே இருந்தது. அவர் ஸ்ரீ ரமண மகரிஷியிடம் தனது கதையைக் கூறினார்.

அப்போது ஸ்ரீ ரமண மகரிஷி இலை தயாரிப்பதில் ஈடுபட்டிருந்தார். அவர் அந்த மனிதரை சற்றும் ஏறெடுத்துப் பார்க்கவில்லை. இலை தயாரிப்பதில் ஈடுபட்டிருந்ததால், தான் சொன்னது எதுவும் அவருக்கு கேட்கவில்லை என்று நினைத்த அந்த மனிதர், அருகில் அமர்ந்திருந்த சிஷ்யரிடம் சென்று, சாப்பிட்ட பிறகு இறுதியில் இலையை தூக்கி எறியப்போகிறோம். அதற்கு ஏன் இவ்வளவு கவனம்?” என்று கேட்டார்.

ஸ்ரீ ரமண மகரிஷி இந்த வார்த்தையைக் கேட்டதும் சிரித்துக்கொண்டே சொன்னார்: ஒரு பொருளை முழுமையாக பயன்படுத்திய பின்பு தூக்கி எறிவதில் எந்தத் தவறும் இல்லை. ஆனால், நல்ல முறையில் இருக்கும்போதே அதை உபயோகிக்காமல் தூக்கி எறிவது என்பது . நான் சொல்வதற்கு என்ன இருக்கிறது? உங்களுக்கு எல்லாம் புரிந்திருக்கும். நீங்கள் படித்தவர், இறைவன் கொடுத்த இந்த உடலை முழுமையாக பயன்படுத்தாமல் தற்கொலை மூலம் பயனின்றி செய்வது இந்த அழகிய உடலுக்கு நீங்கள் செய்யும் துரோகம்.”

எத்தனையோ மகான்கள் இந்த ஞான பூமியில்.

அத்தனை பேருக்கும் நமது வணக்கங்கள்