வார ராசிபலன் – விகாரி வருடம், தை 12 முதல் தை 18 வரை( ஜனவரி 26 – பிப் 01) 2020

மேஷம்:

உத்தியோகஸ்தர்கள்: சக நண்பர்களிடம் இருந்த  பகை மாறி இணக்கம் ஏற்படும். பொருளாதாரம் உயரும். வேறு சில வழிகளிலும் தனம் சேரும். அதிகாரிகளால் ஆதரிக்கப்படுவீர்கள். வாக்கு வன்மை, புகழ் ஏற்படும். செயல்திறன் ஏற்படும்.

பெண்மணிகள்: குடும்பத்தில் நிலவிவந்த தடைகள் நீங்கி, பணிகள் சாதகங்களாக மாறும். சுயமாக சிந்தித்து முடிவு எடுக்கவும். பிரார்த்தனைகளை நிறைவேற்றவும். சுபகாரியங்கள் நடைபெறும்.

மாணவ மணிகள்: சிதறிவிட்ட கவனத்தை ஒருமுகப்படுத்தி படித்தால் மதிப்பெண் கிடைக்கும். புதிய நட்பால் வளர்ச்சி உண்டு. சிலர் வெளிநாடு செல்லலாம்.

சிறுதொழில், வியாபாரம்: செலவுகளை கட்டுப்படுத்தி முதலீடு செய்யவும். தேங்கிய பொருட்கள் விற்பனையாகும். ஒப்பந்தங்கள் கிடைக்கும்.

அரசியல்வாதிகள்: தடை, தாமதங்களைக் கடந்து வெற்றி அடைவீர்கள். செலவு கூடும். தொண்டர் பலம் அதிகரிக்கும்.

ரிஷபம்:

   

உத்தியோகஸ்தர்கள்: புதிய ஊழியர்களினால் மதிப்பு, மரியாதை கிடைக்கும். அதிகாரிகளின் ஆதரவைப் பெற உழைத்தாலும் ஆதரவு கிடைக்காது. பழிகளை ஏற்க வேண்டிய நிலையினை சாமர்த்தியமாக சமாளிக்க வேண்டும். வார இறுதியில் நற்பலன் ஏற்படும்.

பெண்மணிகள்: எதிலும் நிதானமாக செயல்படவும். இல்லறத்துணையிடம் அன்பையும் ஆதரவையும் பெறுவீர்கள். சகோதரர்களால் நன்மை பெற சில விஷயங்களை விவாதிக்க வேண்டாம். அமைதி ஆறுதலைத் தரும்.

மாணவ மணிகள்: எதிலும் நிதானமாக இருக்கவும். கல்வியில் மட்டும் மனது வைத்துப் படித்தால் மதிப்பெண் கிடைக்கும். சிலரை தவிர்க்க வேண்டும்.

சிறுதொழில், வியாபாரம்: கணக்குகளை நேரிடையாக கவனிக்கவும். உற்பத்தித்துறையில் தரம் குறித்து கவனம் செலுத்தவும். பங்குதாரர்களை பகைக்க வேண்டாம்.

அரசியல்வாதிகள்: தொண்டர்களை ஆதரிக்கவும். தலைமையிடம் பணிவைக் காட்ட வேண்டும்.

மிதுனம்:

உத்தியோகஸ்தர்கள்: சிலருக்கு இடமாற்றம் ஏற்பாடும். பணி பளு அதிகரிக்கும். சில தகராறுகள் நிவர்த்தி அடையும்.  தவறுகள் ஏற்படாமல் கவனத்துடன் செயல்படவும். பிரச்சினைகள் தவிர்க்கப்படும்.

பெண்மணிகள்: வரவுகளை சேமித்து வைக்க முனைவீர்கள். சிலருக்கு பிரச்சினை ஏற்பட்டாலும் விரைந்து நன்மை ஏற்படும். சிலருக்கு புத்திரபாக்கியமும், இளம் பெண்களுக்கு திருமணமும் நடைபெறும்.

மாணவ மணிகள்:  சாதுர்யத்துடன் நடந்து கொண்டு வாய்ப்புகளை பயன்படுத்தி முன்னேற வாய்ப்பு கிடைக்கும். அறிவுத் திறனால் அந்தஸ்து உயரும்.

சிறுதொழில், வியாபாரம்: தொழில் வளர்ச்சிக்காக திட்டங்களை நிறைவேற்றுவீர்கள். புதிய வீடு வாங்கலாம். வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

அரசியல்வாதிகள்: தலைமையின் சொற்படி நடப்பீர். தனலாபமும் பெறுவீர்கள். புதிய பதவியும் பெறுவீர்கள்.

கடகம்:

உத்தியோகஸ்தர்கள்: அனைவரிடமும் சகஜமாக பழகினாலும் தங்களின் வளர்ச்சியைக் குறித்து பேச வேண்டாம். சிலருக்கு உயர்பதவி கிடைப்பதால் இடமாற்றம் ஏற்படலாம். அந்தஸ்துக்கு ஏற்ப புதுவீடு கட்ட முனைவீர்கள்.

பெண்மணிகள்: விருந்து, விசேஷங்களில் கலந்து கொள்வீர்கள். பொன், பொருள் சேரும். பெரிய கடன்கள்  தீரும். சேமிக்கத் துவங்குவீர்கள். சிலர் தாய்மார்களாக ஆவார்கள். ஆண் குழந்தை பிறக்கலாம்.

மாணவ மணிகள்: அறிவுத் திறன் அதிகரிக்கும். வாக்கு வன்மையால் புகழ் கிடைக்கும். கலைத்துறையில் புகழ் கிடைக்கும். நண்பர்களால் நன்மை அதிகரிக்கும்.

சிறுதொழில், வியாபாரம்: புதிய துறையில் ஈடுபட்டு லாபம் கிடைக்கும். வாடிக்கையாளர்களால் அதிக வருமானம் கிடைக்கும். செல்வத்தை பாதுகாக்கவும்.

அரசியல்வாதிகள்: சக கட்சியினரிடம் ரகசியம் பகிர வேண்டாம். தலைமையின் பேச்சுக்கு மறுப்பு தெரிவிக்கக்கூடாது.

சிம்மம்:

உத்தியோகஸ்தர்கள்: வெகு நாட்களாக எதிர்பார்த்த சிறந்த வேலை சிலருக்கு கிடைக்கும். வெளியூரில் நல்ல ஊதியத்தில் கிடைக்கும். பணியினால் குழப்பமான மனநிலை ஏற்படும். அதிகார முயற்சியினால் முன்னேற்றம் உண்டு. சிந்தித்து செயல்பட வேண்டும்.

பெண்மணிகள்: இல்லறத் துணையின் ஆதரவும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பீர்கள். உடல்நலம் கவனிக்க வேண்டும். வாரிசுகளால் பெருமை கிடைக்கும்.

மாணவ மணிகள்: போட்டிகளில் பரிசு கிடைக்கும். தாய் மாமனால் உதவி கிடைக்கும். எதிர்பாலினர் விஷயத்தில் சிக்கிக்கொள்ள வேண்டாம். கல்வியில் நாட்டம் செலுத்த வேண்டும்.

சிறுதொழில், வியாபாரம்: தொழிலை விருத்தி செய்ய வேறு தொழிலிலும் வெற்றி கிடைக்க வழியுண்டு. மதிப்பு மரியாதையுடன் பக்தி உணர்வும் எற்படும்.

அரசியல்வாதிகள்: உயர்ந்த பொறுப்பினை தலைமை தந்ததை சிறப்பாக செய்து முடிக்க அலைச்சல் ஏற்படும். இதனால் லாபம் உண்டு. பகைவர்கள் விலகுவார்கள். செல்வமும், செல்வாக்கும் உயரும்.

கன்னி:

உத்தியோகஸ்தர்கள்: எதையும் செய்து முடிக்கும் ஆற்றல் உருவாகும். சகோதரர்களால் நன்மை உண்டு. தைரியத்துடன் சில பணிகளை செய்வீர்கள். எந்த விஷயத்தையும் ஒத்திப்போடாமல் உடனுக்குடன் செய்வது நன்மை தரும். உடல் நலனில் அக்கறை தேவை.

பெண்மணிகள்: குடும்பத்தில் நிலவி வரும் சின்ன சின்னப் பிரச்சினைகளை பெரிதாக்காதீர்கள். விட்டுக் கொடுத்துச் செல்லவும். பேச்சைக் குறைக்கவும். குழப்பத்தைத் தவிர்க்கவும்.

மாணவ மணிகள்: நண்பர்களுடன் கருத்து வேறுபாடு உருவாகும். பகைமையை மறந்து ஆக்கப்பூர்வமாக சிந்திக்கவும். அலைச்சல் வேண்டாம்.

சிறுதொழில், வியாபாரம்: இடையூறு செய்பவர்களை அறிந்து கொண்டு பதற்றத்தை தொழிலில் கண்டு வரவும். பல வழிகளிலும் வருமானம், புகழ் கிடைக்கும்.

அரசியல்வாதிகள்: தலைமையின் ஆதரவை  கேட்டுப் பெற வேண்டும். குழப்பமும், செயல்திறனில் குறைபாடும் ஏற்படும். நிதானம் தேவை.

துலாம்:

உத்தியோகஸ்தர்கள்: பொறுப்பான உயர்பதவி பெறுவீர்கள். துணையாகப் பணிபுரிய உதவிட அமைவார்கள். திட்டமிட்ட பணிகள் அனைத்து வெற்றியைத் தரும். உத்தியோகம், பதவி உயர்வு கிடைக்கும். நவீன வாகனம் வாங்கலாம்.

பெண்மணிகள்: உற்சாகத்துடனும், தைரியத்துடன் சிறப்பாகப் பணியாற்ற முடியும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் இனிமையாக இருப்பீர்கள். பல வகையிலும் வருமானமும் புகழும் கிடைக்கும்.

மாணவ மணிகள்:  ஆக்கப்பூர்வமான யோசனை தோன்றும். சாமர்த்தியம் அதிகரிக்கும். செயல்கள் ஓங்கும். கல்வி, விளையாட்டு, போட்டிகளில் மகிழ்ச்சி கிடைக்கும்.

சிறுதொழில், வியாபாரம்: போட்டியாளர்களை வெல்ல முடியும். நிலுவைத்தொகை வசூலாகும். புதிய நிறுவன ஒப்பந்தம் கிடைக்கும். வளர்ச்சி கூடும்.

அரசியல்வாதிகள்: சக கட்சியினருடன் செயல் குழப்பம் ஏற்படும். நிதானமாக நடந்து கொண்டு தலைமையிடத்தில் நம்பிக்கையைப் பெற முயற்சி செய்ய வேண்டும்.

விருச்சிகம்:

உத்தியோகஸ்தர்கள்: வெகுநாட்களாக இருந்த தடைகள் விலகி பதவி உயர்வு பெறுவீர்கள். கெளரவமான இடம் அமையும். விருப்பத்திற்கு ஏற்ப இடமாற்றம் கிடைக்கும். நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். நிலுவைத்தொகை மொத்தமாக கிடைக்கும்.

பெண்மணிகள்: தேவையற்ற, அனாவசியமான செலவுகளை கட்டுப்படுத்தவும். அதேசமயம் உடல் நலனுக்காக செலவு ஏற்படும். ஆடை, ஆபரணங்கள் கிடைக்கும். இல்லறத்துணையின் ஆதரவு கிடைக்கும். விடாமுயற்சியால் வீடு கூட கிடைக்கும்.

மாணவ மணிகள்: கல்வியில் தேர்ச்சியும், சிலருக்கு வேலையும் கிடைக்கும். போட்டிகளில் வெற்றி உண்டு. பழைய நண்பர்களின் பகை மறந்து இணைந்து மகிழ்வீர்கள்.

சிறுதொழில், வியாபாரம்: தொழிலில் அபாரமான வெற்றி கிடைக்கும். ஒப்பந்தங்களினால் இனி வளர்ச்சியை நோக்கிச் செல்லலாம்.

அரசியல்வாதிகள்: தொண்டர்கள் ஆதரவு அதிகரிக்கும். கட்சியில் முக்கியத்துவம் பெறுவீர்கள்.

தனுசு:

உத்தியோகஸ்தர்கள்: அதிகப் பணிச்சுமையால் அல்லலுற்ற உங்களுக்கு சற்று ஆசுவாசம் கிடைக்கும். வெளியூரில் வேலை அமைந்தால் ஏற்றுக்கொள்ளவும். ஆரோக்கியம் சிக்கல் இருக்க மருத்துவரை அணுகுவது நல்லது.

பெண்மணிகள்: குடும்பத்தில் உள்ள சலசலப்புக்கு எதிராக செயல்பட வேண்டாம். பிரச்சினைகளைக் கண்டுகொள்ளாமல் இருக்கவும். இல்லறத்துணையின் எண்ணங்களுக்கு ஆதரவாக இருக்கவும். சகோதர உதவி கிடைக்கும்.

மாணவ மணிகள்: நிதானமாக நடந்து கொள்ளவும். கருத்துகளை தீவிரமாக எடுத்துக்கொள்ள வேண்டாம். வாகனம், பயணம், விளையாட்டுகளில் வேகம் குறைக்க வேண்டும்.

சிறுதொழில், வியாபாரம்: பங்குதாரர்களிடம் விட்டுக்கொடுத்து நட்புணர்வு பேண ஊழியர்களின் நலனில் அக்கறை காட்டவும். நண்பர்களால் புதுத்தொழிலுக்கு திட்டம் ………

அரசியல்வாதிகள்: பயணங்களின் போது எச்சரிக்கை தேவை. சண்டை, சச்சரவுகளை தவிர்க்கவும்.

மகரம்:

உத்தியோகஸ்தர்கள்: புதிய முன்னேற்றம் கிடைக்கும். செயல்திறன், குண மேன்மையால் கடினமான வேலைகளை எளிதாக செய்திடுவீர்கள். முயற்சிகளில் வெற்றி, ஊதிய உயர்வு கிடைக்கும். சிலர் வெளிநாடு செல்லலாம். மகிழ்ச்சி அதிகரிக்கும்.

பெண்மணிகள்: வேற்றுமொழி பேசும் பெண்களால் உதவி கிடைக்கும். புத்தி சாதுர்யத்தால் பொருள் சேரும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு. ஆரோக்கியம் ஏற்படும். சிலருக்கு வாழ்த்துகளும், விருதும் கூட கிடைக்கும்.

மாணவ மணிகள்: சிறப்பான முறையில் தேர்வுகளில் மதிப்பெண் கிடைக்கும். உற்சாகமும், ஆரோக்கியமும் அதிகரிக்கும். பேச்சுத்திறனால் பெருமைகள் சேரும்.

சிறுதொழில், வியாபாரம்: வாடிக்கையாளர்களால் வருமானம் அதிகரிக்கும். அதிக உழைப்பு இருந்தாலும் உற்சாகமாக பணியாற்றுவார்கள்.

அரசியல்வாதிகள்: தொண்டர்களின் ஆதரவு பெருகும். உட்கட்சியினரால் உருவாகும் தடைகள் நீங்கும். தலைமை உங்களை ஆதரிக்கும். தக்க பதவி கிடைக்கும்.

கும்பம்:

உத்தியோகஸ்தர்கள்: கடினமான உழைப்புக்கு சாதகமானப் பலனை பெற இயலும். ஆதாயமும் அதே சமயம் பிறருடன் தேவையற்ற வாக்குவாதங்களை உருவாக்குவீர்கள். கண்டும் காணாமல் போவது சமூக அந்தஸ்து உயரும். இனிமையாக பேச பழக வேண்டும்.

பெண்மணிகள்: இல்லற வாழ்வில் வளர்ச்சி மகிழ்ச்சி ஏற்படும்.சுப நிகழ்ச்சிகளில் பங்கேற்று கெளரவமும் அந்தஸ்தும் உயரும். செல்வாக்கும் உயரும். சிலருக்கு திருமணமும், மழலை செல்வம், ஆபரணங்கள் பெறுவீர்கள். பயணங்களினால் ஆனந்தம் ஏற்படும்.

மாணவ மணிகள்: கல்வியில் சிறந்து விளங்குவீர்கள். கணிதத்தில் திறமை ஏற்படும். அடிப்படைத் தேவைகள் பூரணமாகக் கிடைக்கும்.

சிறுதொழில், வியாபாரம்: தொழிலில் மேன்மை அதிகரிக்கும். பங்குதாரர்களும், ஊழியர்களும் ஒத்துழைப்புத் தருவார்கள். முயற்சிகள் அனைத்தும் முன்னேற்றத்தைத் தரும்.

அரசியல்வாதிகள்: மென்மையாக பேசுவதாக நற்பெயர் கிடைக்கும். தொண்டரால் நன்மை உண்டு.

மீனம்:

உத்தியோகஸ்தர்கள்: சக ஊழியர்களின் உதவியால் நற்பெயர் கிடைக்கும். எவரிடமும் பகை காட்ட வேண்டாம். சக ஊழியர்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் குணம் தவிர்க்கவும். பணிகளை ஒருங்கிணைந்து கவனத்துடன் செய்யவும். முயற்சிகளில் நம்பிக்கையுடன் செயல்படவும்.

பெண்மணிகள்: வாக்கு சாதுர்யத்தால் பாக்கியங்களைப் பெறுவீர்கள். இல்லற வாழ்வில் சுபநிகழ்ச்சிகளால் மகிழ்ச்சி அடைவீர்கள். சங்கடங்கள் நீங்கும். ஆரோக்கியம் பெறுவீர்கள். வீட்டை அலங்கரிப்பீர்கள். பிறந்த வீட்டு உறவினர்களினால் மகிழ்ச்சி கிடைக்கும்.

மாணவ மணிகள்: கல்வியில் தேர்ச்சி அடைவீர்கள். காத்திருந்த பணி ஆணை கிடைக்கும். உயர்க்கல்விக்காக வெளிநாடு செல்ல வாய்ப்பு அமையும். உறவினர் உதவுவார்கள்.

சிறுதொழில், வியாபாரம்: வரவு – செரவு கணக்குகளை நேரிடையாக கவனிக்கவும். நேர்மையை கடைபிடிப்பதால் செல்வாக்கு உயரும். கடன் தீரும். நிலுவை கைக்கு கிடைக்கும்.

அரசியல்வாதிகள்: பதவி கிடைக்கும். அனைவரையும் அரவணைத்துச் சென்றால் ஆதாயம் உண்டு. பிறருக்கு உதவுங்கள்.