மேஷம்:
உத்தியோகஸ்தர்கள்: திறமையாகச் செயல்பட்ட போதும் ஆதாயமோ, அங்கீகாரமோ கிடைக்வில்லை என்று ஏக்கம் நீங்கும். அதேசமயம் அலுவலகப் பணி அதிகம் ஆகும். சிறப்பு சலுகைகள் கிடைக்கும். சீரான வளர்ச்சி ஏற்படும். அதிகாரிகளால் முக்கியத்துவம் பெறுவீர்கள்.
பெண்மணிகள்: இல்லறத் துணையுடன் இணக்கம் ஏற்படும். குருவின் பார்வையால் சுபநிகழ்வுகள் நடைபெறும். உறவினர் மத்தியில் மரியாதை அதிகரிக்கும். வீட்டிற்குத் தேவையான பொருட்கள் அதிகரிக்கும்.
மாணவ மணிகள்: கல்வியில் பின்னடைவு நீங்கும். நினைவாற்றல் அதிகரிக்க பயிற்சி மேற்கொள்ளவும். சிறந்த மதிப்பெண் பெற ஆசிரியரை நாடி சந்தேகத்தை நீக்கிக்கொள்ளவும்.
சிறுதொழில், வியாபாரம்: விறுவிறுப்பாக வியாபாரம் நடைபெறும். இயந்திரங்கள் பராமரிக்க வேண்டியதிருக்கும்.
அரசியல்வாதிகள்: ஆதரவு பெருகும். குறைகளை நீங்கும்.
ரிஷபம்:
உத்தியோகதஸ்தர்கள்: இடமாற்றம் ஏற்பட்டாலும் இன்முகத்துடன் ஏற்றுக்கொள்ளுங்கள். அலுவலகச் சுமைகளும் மற்றவர்களின் அலட்சியப்போக்கும் மனதை வாட்டும் என்றாலும் தங்களின் கடின உழைப்பால் கவலைகளை மறந்திடுங்கள். சிலருக்கு சலுகைகளும் கிடைக்கும். தேவையான கடனுதவியும் கிடைக்கும்.
பெண்மணிகள்: இல்லறத் துணையுடன் ஏற்படும் பிணக்குகளை தவிர்க்க முயற்சி செய்யுங்கள். குடும்பப் பொறுப்பு அசதியைத் தரும். சில விஷயங்களில் தடை, தாமதங்கள் ஏற்படும். வாரிசுகளின் வாழ்க்கைக் குறித்து கவலைப்படாதீர்கள்.
மாணவ மணிகள்: பாடத்தில் அதிக கவனம் தேவை. புரியாதப் பாடங்களை அறிந்துகொள்ள முயற்சி தேவை. கடின உழைப்பே மதிப்பெண்களை அள்ளித்தரும்.
சிறுதொழில், வியாபாரம்: எதுவும் சுலபமாக நடைபெறாது. புதிய திட்டங்களை ஒத்திப் போடவும்.
அரசியல்வாதிகள்: நேர்மை, மக்கள் பணி அவசியம் தேவை.
மிதுனம்:
உத்தியோகஸ்தர்கள்: அலுப்பு, சலிப்பு, அவநம்பிக்கை போன்றவை விலகிச் செல்லும். புத்தியின் சக்தி அதிகரிக்கும். கவலைகளும், குறைகளும் விரைந்தோடிச் சென்றுவிடும். உடல்நிலை சரியாகும். அசெளகரியமான சூழ்நிலை விலகி, மகிழ்ச்சியை அதிகரிக்கும். பதவி உயர்வு, தேவையான சலுகைகளும் கிடைக்கும்.
பெண்மணிகள்: திருமணத்திற்கு காத்திருக்கும் இளம் பெண்களுக்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். மழலை விரும்பியவர்க்கு மகிழ்ச்சி தரும் விஷயங்கள் நடைபெறும். வாகன, வீடு வசதிகள் கிடைக்கும்.
மாணவ மணிகள்: கடினமான பாடங்களை கற்றறிந்து நினைவில் கொள்ள முடியும். தனித்திறன் பயிற்சி மேற்கொள்ளவும். தேர்ச்சி கிடைக்கும். மகிழ்ச்சி கூடும்.
சிறுதொழில், வியாபாரம்: சிரமங்கள் எதுவாக இருந்தாலும் வருமானம் குறையாது. நிர்வாக சீரமைப்பு அவசியம்.
அரசியல்வாதிகள்: உங்களின் புத்திசாலித்தனத்தால் மாற்ஙகள் கிடைக்கும்.
கடகம்:
உத்தியோகஸ்தர்கள்: அலுவலகத்தில் சக ஊழியர்களின் செயல்களால் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும். பதவி உயர்வு கிடைக்கும். விரும்பிய இடமாற்றம் கேட்பதும் கிடைக்கும். சிலருக்கு மாறுதல்களும் ஆறுதலாக மாறும். பதவி உயர்வும் ஊக்கத் தொகையும் கிடைக்கும்.
பெண்மணிகள்: குடும்ப உறுப்பினர்களிடமும், அக்கம், பக்கத்தினரிடமும் பக்குவமாக பேசி, பழக வேண்டும். கொடுக்கல், வாங்கல் விஷயங்களில் எச்சரிக்கை தேவை.
மாணவ மணிகள்: ஊக்கத்துடன் தெளிவாக படிக்கவும். ஆசிரியரின் அறிவுரைப்படி தெளிவாகப் படிக்கவும்.
சிறுதொழில், வியாபாரம்: பொருளாதார சிக்கல்களிலிருந்து ஓரளவு விடுபடலாம். கடன் தவிர்க்கவும். நேர்வழியில் சிந்திக்கவும்.
அரசியல்வாதிகள்: குறுக்கு வழியில் செல்ல வேண்டாம். அவசரம் தவிர்க்கவும்.
சிம்மம்:
உத்தியோகஸ்தர்களுக்கு: அன்றாடப் பணிகளை அவசரப்படாமல், அதேசமயம் துரிதமாக செய்து பழகுங்கள். பணம் புழங்கும் இடத்திலும், வரவு – செலவு விஷயத்திலும் கவனமாகப் பணியாற்ற வேண்டும். திட்டமிட்டு முக்கியத்துவத்தை வரிசைப்படுத்தி பணியாற்றவும்.
பெண்மணிகள்: நிதானம் தவறாமில் பேசவும், செயல்படவும். செலவு செய்யும் முன் யோசித்து முடிவெடுக்கவும். குழந்தைகளின் செயல்களில் கவனம் வைக்கவும்.
மாணவ மணிகள்: அலட்சியம், ஒத்திப்போடுதல், வேறு விஷயங்களில் ஈடுபாடு போன்றவைகளை தவிர்க்கவும். மணித்துளிகளை மதித்து மதிப்பெண்களைப் பெறுங்கள்.
சிறுதொழில், வியாபாரம்: கையொப்பம் இடும் முன் எச்சரிக்கை தேவை. கடன் தவிர்க்கவும். தைரியம் தேவை.
அரசியல்வாதிகள்: நேர்மை, சேவை மட்டுமே நற்பெயரைத் தரும்!
கன்னி:
உத்தியோகஸ்தர்கள்: பொறுப்புகள் அதிகரிக்கும். திட்டமிட்ட பணிகள் அனைத்தும் தாமதமாகம் என்பதால் வேலை நேரத்தை அதிகரிக்க வேண்டும். சிலருக்கு இடமாற்றம் ஏற்படலாம். பதவி உயர்வும் கிடைக்கலாம். ஊதிய உயர்வு விஷயத்தில் மனக்கசப்பு ஏற்படும்.
பெண்மணிகள்: இல்லறத்தில் கருத்து வேறுபாடு என்பது சகஜம் என்றாலும் வாக்குவாதம் தவிர்க்கவும். குழந்தை பாக்கியம் சிலருக்குக் கிடைக்கும். இளம் பெண்களுக்கு ஏற்ற வரன் அமைதல் போனற்வை நடைபெறும்.
மாணவ மணிகள்: குழப்பங்கள் நீங்கும். உற்சாகம் பிறக்கும். படிப்பிலும், கலைகளிலும் விளையாட்டுகளிலும் பெருமை கிடைக்கும். புதிய துறையில் ஈடுபாடு ஏற்படும்.
சிறுதொழில், வியாபாரம்: அகலக்கால் வைக்காமல் சில மாற்றங்களை செய்து அபிவிருத்தி அடையலாம். தவறுகளை திருத்திக் கொள்ளுங்கள்.
அரசியல்வாதிகள்: தலைமையின் ஆதரவு, பணவரவாக மாறும்.
துலாம்:
உத்தியோகஸ்தர்கள்: உழைப்புக்கு அஞ்சாமல் உயர்வான சிந்தனையுடன் பணியாற்றுவீர்கள். ஊக்கத்துடன் செயல்பட்டு சலுகைகள் பல பெற்று விளங்குவீர்கள். முன்னேற்றத்திற்கு ஏதுவான சவால்களை சந்தித்து வெற்றிப் பெறுவீர்கள். உயரதிகாரிகளின் ஆதரவால் பதவி உயர்வும் கிடைக்கும்.
பெண்மணிகள்: உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை அவ்வப்போது ஓய்வும் உணவும் தேவை என்பதை உணரவும். சிலருக்கு மனம் திருமணத்தை நாடும். பக்தி ஆதரவு தரும்.
மாணவ மணிகள்: படிப்பு விஷயத்தில் ஒத்திவைப்பதை தவிர்க்க வேண்டும். கடின முயற்சி, துணைக் கல்வி அவசியம் தேவை. சிலருக்கு வேலைவாய்ப்பும் கிடைக்கும்.
சிறுதொழில், வியாபாரம்: சரக்குகளை கொள்முதல் செய்வதில் எச்சரிக்கை தேவை. கடன் தவிர்க்கவும். ஒப்பந்தத்தில் கவனம் தேவை.
அரசியல்வாதிகள்: ஆதரவாளர்களை அதிகப்படுத்துங்கள்
விருச்சிகம்:
உத்தியோகஸ்தர்கள்: உயரதிகாரிகளின் ஆதரவு கிடைக்காது என்றாலும், முக்கிய பொறுப்புகளை உங்களிடம் ஒப்படைப்பார்கள். ஊர்மாற்றம் பதவி மாற்றம் நிகழும். செலவுகளை சமாளிக்கத் தேவையான உதவிகளும் கிடைக்கும். உங்களின் ரகசியங்களை சக ஊழியர்களிடம் பகிர வேண்டாம்.
பெண்மணிகள்: இல்லறத் துணையின் மூலம் செலவுகளை கட்டுப்படுத்துங்கள். சிலர் விருந்து விசேஷங்களுக்கு செல்லாமல் தவிர்ப்பது நல்லது. விலை உயர்ந்த பொருட்களை கவனமாக கையாளவும். பற்றாக்குறையை கட்டுப்படுத்த கடன் வாங்குவதை தவிர்க்கவும்.
மாணவ மணிகள்: படிப்பதற்கு அதிக நேரம் ஒதுக்கவும். புரியாத விஷயங்களை நண்பர்களிடம் கேட்டு தெளிவு பெறவும். எதிர்பாலினரிடத்தில் சற்று ஒதுங்கியே பழகவும்.
சிறுதொழில், வியாபாரம்: அதிக உட்படாதீர்கள். அரசாங்க அதிகாரிகளை அனுசரித்துச் செல்லவும்.
அரசியல்வாதிகள்: பொறுமையும், பொறுப்பும் இப்போது அவசியம்.
தனுசு:
உத்தியோகஸ்தர்கள்: அதிகப் பணியினாலும், தடை, தாமதங்களாலும் ஏற்பட்ட பிரச்சினைகள் குறையத் துவங்கும். பதவி உயர்வும், பணப்பரிசும் சிலருக்கு கிடைக்கும். விருப்ப ஓய்வு பெற்று கணிசமான தொகையுடன் புதிய வாழ்வைத் துவக்க சிலர் திட்டமிடுவார்கள். வளர்ச்சி உண்டு.
பெண்மணிகள்: இல்லறத் துணையுடன் கலந்து பேசி குடும்ப வளர்ச்சிக்காக திட்டமிடுவீர்கள். குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். தேவையான அளவு பணவரவு கிடைக்கும். அத்தியாவசியமான உபகரணங்கள் வாங்குவீர்கள். வாரிசுகளின் வளர்ச்சிக்காக செலவு செய்வீர்கள்.
மாணவ மணிகள்: ஆசிரியரின் ஆதரவு, உங்கள் துறையில் உள்ள பெரிய மனிதர்களின் தொடர்பால் மகிழ்ச்சி கிடைக்கும். வேலை, சுயதொழில் சம்பந்தமாக ஆலோசனை கிடைக்கும்.
சிறுதொழில், வியாபாரம்: ஊழியர்கள், நிர்வாகம், சம்பந்தமான பிரச்சினை தீரும். அதிக வருமானம் கிடைக்கு உத்திகள் பலிக்கும்.
அரசியல்வாதிகள்: உழைப்புக்கு ஏற்ப பலன் உண்டு. நற்பெயர் கிடைக்கும்.
மகரம்:
உத்தியோகஸ்தர்களுக்கு: உங்களது முயற்சியில் தீவிரமாக செயல்பட்டு வெற்றி இலக்கை எட்டமுடியும். உயரதிகாரிகளின் ஆதரவு இல்லையென்றாலும் உங்களது பணியியல் சிறந்து விளங்குவீர்கள். அதேசமயம் பொருள் இழப்பை தவிர்க்க எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
பெண்மணிகள்: குடும்பப் பொறுப்பு, பண விவகாரங்களில் தங்களுக்கு நற்பெயர் கிடைப்பது கடினம். திறமையாக செயலாற்றினாலும், கண்காணிப்புடன் இருக்க வேண்டும். தேவையிருந்தாலும் ஆசையை அடக்கிக்கொண்டு, நகை வாங்குவதை தவிர்க்க வேண்டும்.
மாணவ மணிகள்: ஆசிரியர்களின் ஆதரவு இல்லையென்றாலும், அக்கறையுடன் படிக்க வேண்டும். வேறுவேறு விஷயங்களில் அலைபாயும் மனதை கட்டுப்படுத்தவும்.
சிறுதொழில், வியாபாரம்: அனைத்து பணிகளையும் நேரிடையாக கண்காணித்து செய்யவும்.
அரசியல்வாதிகள்: பொறுப்புடன் செயலாற்றவும். நேர்மை பாதுகாக்கும்.
கும்பம்:
உத்தியோகஸ்தர்கள்: எதிர்காலம் குறித்த கவலைகள் நீங்கும். விரும்பிய பணியும், பணியிடமும் கிடைக்கும். அலுவலகத்தில் அங்கீகாரம், ஊதிய உயர்வு, பதவி உயர்வும் தேடி வரும். உயரதிகாரிகள் உங்களின் திறமையை ஏற்றுக் கொண்டு ஆதரவளிப்பார்கள். அதேசமயம் பழைய பகையை மறந்து சக ஊழியர்களிடம் சகஜமாகப் பழகவும்.
பெண்மணிகள்: எதிர்பார்த்த அளவை விட அதிகப் பணம் புழங்கும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். இல்லறத் துணையின் அன்பை நாடிப்பெறவும். இளம் பெண்களுக்கு திருமணமும், மழலை விரும்பியவர்க்கு மகப்பேறும் கிடைக்கும்.
மாணவ மணிகள்: மதிப்பெண்கள் சிறப்பாக கிடைக்கும். சிலருக்கு வேலை உத்திரவாதம் கிடைக்கும். உற்சாகமாக செயல்படவும்.
சிறுதொழில், வியாபாரம்: வருமானம் கூடும். சேமிப்பு தேவை.
அரசியல்வாதிகள்: முக்கியத்துவம் உள்ள பதவி கிடைக்கும்.
மீனம்:
உத்தியோகஸ்தர்கள்: கடினமான காலத்தை கடந்து விட்டீர்கள். வார மத்தியிலிருந்து மகத்தான மாற்றங்களைக் காண்பீர்கள். அலுவலகப் பிரச்சினைகள் தீரும். அதேசமயம் பொறுப்புகள் அதிகரிக்கும். சலுகைகள் பெற்று மகிழ்ச்சியுடன் திகழ்வீர்கள்.
பெண்மணிகள்: இல்லறத் துணையின் விருப்பங்களை நிறைவேற்றவும். சிறிய விஷயங்களை எல்லாம் பெரிது படுத்தாதீர்கள். குழந்தைகளின் வளர்ச்சியில் மகிழ்ச்சி கிடைக்கும். குடும்பத்தில் பணிகளை நேரிடையாக கவனித்து பெருமிதம் அடைவீர்கள்.
மாணவ மணிகள்: தாமதமாகவும் அலுப்புடனும் இருப்பதை தவிர்க்கவும். அனைவரின் ஆசி கிடைக்கும். விருப்பங்கள் நிறைவேறும். பதவி கிடைக்கும்.
சிறுதொழில், வியாபாரம்: பண விஷயத்தில் அதிக முயற்சி வேண்டாம். பொருளிழப்பைத் தவிர்க்க எச்சரிக்கை உணர்வு தேவை.
அரசியல்வாதிகள்: உழைப்பை மட்டும் நம்புங்கள். பலன் கிடைக்கும்.