வார ராசிபலன் – விகாரி வருடம், மாசி 04 முதல் மாசி 10 வரை( பிப்ரவரி 16 –22 ) 2020

மேஷம்:

உத்தியோகஸ்தர்கள்: அலுவலகத்தில் நீடித்த சங்கடம் நீங்கும். வாக்கு வன்மையும் ஏற்படும். புதிய பதவி, அந்தஸ்து கிடைக்கும். உயரதிகாரிகளின் சில சலுகைகளைப் பெறுவீர்கள். நண்பர்களுக்கு உதவிகள் செய்வீர்கள்.

பெண்மணிகள்: இல்லறத் துணையுடன் இணக்கமாக இருப்பீர்கள். தேவையற்ற செலவுகளை குறைக்க வேண்டும். சிலரிடம் வாக்குவாதம் தவிர்க்கவும். ஆரோக்கியம் மேம்படும்.

மாணவ மணிகள்: செயல்திறன் அதிகரிப்பதால் மதிப்பு உயரும். சக மாணவர்களால் பாராட்டப்படுவீர்கள். வார இறுதியில் வேடிக்கை, விரோதங்களால் ஈடுபடுவீர்கள்.

சிறுதொழில், வியாபாரம்: பங்குதாரர்களின் ஆதரவு கிடைக்கும். புதியவர்கள் இணைவார்கள்.  புதிய உத்திகளை மேற்கொண்டு தனலாபம் அதிகரிக்கும்.

அரசியல்வாதிகள்: உற்சாகத்துடன் பணியாற்றுவீர்கள். தலைமையின் ஆதரவு பெருகும்.

ரிஷபம்:

உத்தியோகஸ்தர்கள்: அலுவலகப் பணியை திறம்பட செய்து பாராட்டப்படுவீர்கள். உங்களின் கருத்து அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்படும். ஊக்க  ஊதியம் சிலருக்குக் கிடைக்கும். பதவி உயர்வுக்கு பரிந்துரைக்கப்படுவீர்கள்.

பெண்மணிகள்: புண்ணியத்  தலங்களுக்குச் செல்வீர்கள். குடும்ப நிர்வாகத்தில் நற்பெயர் கிடைக்கும். மகிழ்ச்சி பெருகும். குழந்தைகளால் பெருமை ஏற்படும். வழிபாடு வளம் தரும்.

மாணவ மணிகள்: கல்வியில் தேர்ச்சி உண்டாகும். நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும். பகுதிநேரப் பணியில் பணபலம் பெறுவீர்கள். புதிய வாகனம் வாங்கலாம்.

சிறுதொழில், வியாபாரம்: தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் ஏற்படும். உங்களின் திட்டங்களை பங்குதாரர்கள் ஏற்றுக்கொள்வார்கள். ஊழியர்களுக்கு உதவி செய்வீர்கள்.

அரசியல்வாதிகள்: புதிய பதவி கிடைக்கும். தொண்டர் பலம் அதிகரிக்கும்.

மிதுனம்:

உத்தியோகஸ்தர்கள்: அலுவலகத்தில் எதையும் ஆராய்ந்து முடிவு எடுக்கவும். நிதானமான செயல்பாடுகளால் உயரதிகாரிகளின் பேச்சுக்கு ஆட்படலாம். பொறுமையாக எடுத்துரைக்கவும். அலைச்சலை  தவிர்க்கவும். சிலரை புரிந்துகொள்வீர்கள்.

பெண்மணிகள்: நண்பர்களுக்காக அதிகம் செலவு செய்வீர்கள். அலைச்சல்களை தவிர்க்கவும். கல்வியில் கவனம் செலுத்தினால் தான் மதிப்பெண் கிடைக்கும். எதிலும் அவசரம் தவிர்க்கவும்.

சிறுதொழில், வியாபாரம்: அரசு அதிகாரிகளிடம் இணக்கமாகப் பேசி பணிகளை நிறைவேற்றிக் கொள்ளவும். பங்குதாரர்களிடம் விரோதம் தவிர்க்கவும். தனலாபம் குறையாது.

அரசியல்வாதிகள்: தலைமையிடம் தணிந்து செல்லவும்.  பொதுமக்களின் பிரிச்சினைகளில் நிதானித்து செயல்படவும்.

கடகம்:

உத்தியோகஸ்தர்கள்: அலுவலகத்தில் இருந்த சண்டை, சச்சரவுகள் நீங்கும். பணிகளை சுலபமாக, விரைந்து செய்து நற்பெயர் எடுப்பீர்கள். அந்தஸ்து, புகழ் கிடைக்கும். கடன்கள் தீரும். நிம்மதியான மனநிலையில், தலைநிமிர்ந்து நடப்பீர்கள்.

பெண்மணிகள்: குடும்பத்தினரின் ஆதரவால் பணிகளை நிறைவேற்றுவீர்கள். கலகம் செய்தவர்கள் காணாமல் போவார்கள். தன பிராப்தி உண்டாகும். புதுவீடு, மனை வாங்குவீர்கள். விருந்து, விசேஷங்களில் பங்கேற்று மகிழ்வீர்கள்.

மாணவ மணிகள்: புத்தி, சாதுர்யம் ஏற்படும். சிலருக்கு பதவிகள் கிடைக்கும். அனுபவ அறிவினால் சிக்கல்களைத் தீர்ப்பீர்கள். கல்வியில் உயர் மதிப்பெண் கிடைக்க உழைப்பு தேவை.

சிறுதொழில், வியாபாரம்: வளர்ச்சிக்கு முதலீடு செய்ய வேண்டும். அரசு ஆதரவு கிடைக்காது. தொழிலாளர் நலன் பேணவும்.

அரசியல்வாதிகள்: தலைமையை அனுசரித்துச் செல்லவும். போராட்டங்களில் பங்கேற்பதை தவிர்க்கவும்.

சிம்மம்:

உத்தியோகஸ்தர்கள்: புத்தி தெளிவும் செயல்திறனும் அதிகரிக்கும். நண்பர்களுடன் நப்பை பேணவும். தடை, தாமதங்களை பதட்டமின்றி கையாளவும். சிலருக்கு அரசு உத்தியோகத்திற்கான வாய்ப்பு கிடைக்கும்.

பெண்மணிகள்: இளம் பெண்களுக்கு திருமணம் ஆகும். கீர்த்தி அதிகரிக்கும். விருந்து, விசேஷங்களில் முக்கியமானவர்களின் அறிமுகம் கிடைக்கும். குலதெய்வ வழிபாடு செய்வீர்கள்.

மாணவ மணிகள்: குழப்பமான மனநிலையிலிருந்து விடுபட  வேண்டும். சோம்பலை தவிர்க்கவும். புதிய நண்பர்களால் உயர்க்கல்விக்கு வழி கிடைக்கும்.

சிறுதொழில், வியாபாரம்: அனைவரிடமும் நட்புடன் பழகவும். பொருள் இழப்பை தவிர்க்க எச்சரிக்கை தேவை.

அரசியல்வாதிகள்: சக கட்சியினரிடத்தில் வாக்குவாதம் தவிர்க்கவும். பதவியை தக்கவைக்கவும். தலைமையை அனுசரித்துச் செல்லவும்.

கன்னி:

உத்தியோகஸ்தர்கள்: சிலருக்கு அரசு வழியில் ஆதாயம் உண்டு. சேமிப்பு உயரும். மரியாதை அதிகரிக்கும். மதிப்பு உயரும். வேலைகள் மறையும். மகிழ்ச்சியுடன் பணிகளை எடுத்துச்செய்வீர்கள்.

பெண்மணிகள்: தன விருத்தி உண்டு. கடினமான பணிகளை புத்தி சாதுர்யத்தால் எளிதாக செய்து காட்டுவீர்கள். சிலர் தாய்மார்களாக வாய்ப்பு உள்ளது. பயணங்களால் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும்.

மாணவ மணிகள்: கல்வியில் தடைகள் விலகி, வெற்றி கிடைக்கும். அரசு உத்தியோகம் கிடைக்கும். கடின உழைப்பிற்கேற்ப மதிப்பெண் அதிகரிக்கும்.

சிறுதொழில், வியாபாரம்: நிலுவைத் தொகைகள் வசூலாகும். கடன்களும் தீரும். வெளிநபர்களால் தொழிலில் பாதிப்பு ஏற்படும். தைரியம் அதிகரிக்கும்.

அரசியல்வாதிகள்: பொதுமக்களிடம் மதிப்பு அதிகரிக்கும். சில விழாக்களில் முக்கியஸ்தராக இருப்பீர்கள்.

துலாம்:

உத்தியோகஸ்தர்கள்: சுறுசுறுப்பாக பணியாற்றவும். எதையும் செய்து முடிக்கும் ஆற்றல் பிறக்கும். எதையும் செய்யும் துணிவு உண்டாகும். உங்களிடம் பணியாற்றுபவர்கள் நன்றியுணர்வுடன் இருப்பார்கள். சிலருக்கு தலைமைப் பதவி கிடைக்கும். வாகனம் வாங்குவீர்கள்.

பெண்மணிகள்: சகோதரர்களால்  நன்மை உண்டு. குடும்பத்தில் உதவி செய்ய ஆட்கள் அமைவார்கள். உயர் ரக ஆடை, ஆபரணங்கள் கிடைக்கும். சிலர் பாக்கிய விருத்தி பெறுவார்கள்.

மாணவ மணிகள்: சக மாணவர்கள் நண்பர்களுடன் சினேகத்தை அதிகப்படுத்தவும். எல்லோருடனும் இனிமையாக பழகுவது நல்லது. சோம்பலைத் தவிர்க்கவும். படிப்பில் ஆர்வம் காட்டவும்.

சிறுதொழில், வியாபாரம்: தகுந்த ஆலோசனை பெற்ற பிறகு முதலீடு செய்யவும். தொழிலாளர்களின் நலனில் அக்கறை காட்டவும்.

அரசியல்வாதிகள்: அவசரப்படாமல் பேசவும். நன்மைகள் நாடி வரும்!

விருச்சிகம்:

உத்தியோகஸ்தர்கள்: பதவி உயர்வும், அந்தஸ்தும் நாடி வரும். பகைவர்கள் நண்பர்களாவர்கள். சிலர் விலகிச் செல்வது நன்மை தரும். அறிவுத் திறனால் பணிகளை சுறுசுறுப்பாகச் செய்வீர்கள். விலையுர்ந்த பொருட்களைப் பாதுகாக்கவும்.

பெண்மணிகள்: உதவி செய்யவும். உபயோகமாகவும் சிலர் அமைவார்கள். சிலருக்கு குழந்தை பாக்கியம் அமையும். நாவன்மை அதிகரிக்கும். பெரும்புகழ் கிடைக்கும். வீடு, மனை சிலருக்க வாய்ப்பு உண்டு.

மாணவ மணிகள்: ஆக்கப்பூர்வமான யோசனை தோன்றும். சாமர்த்தியம் செயல் திறனும் ஓங்கும். வார இறுதியில் விலையுர்ந்த பொருட்களை பாதுகாக்க வேண்டும். கல்வி உயர்வுண்டு.

சிறுதொழில், வியாபாரம்: வருமானம் அதிகரிக்கும். கெளரவ பதவி கிடைக்கும். பயணங்களால் பயன் உண்டு.

அரசியல்வாதிகள்: மக்களிடம் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். ஆதரவாளர்கள் மதிப்பு கூடும்.

தனுசு:

உத்தியோகஸ்தர்கள்: வேலை மாற்றம், ஊர் மாற்றம் ஏற்படும். குறிக்கோளற்ற அலைச்சலும் ஏற்படும். சிலருக்கு வேறுவேலை தேட வேண்டியது ஏற்படும். அச்சம் தவிர்த்து ஆக்கப்பூர்வமான சிந்தித்து செயல்படவும். செலவை கட்டுப்படுத்தவும்.

பெண்மணிகள்: இளம் பெண்களுக்கு ஆண் குழந்தை பிறப்பதற்கான வாய்ப்பு கிடைக்கும். அனைவரிடமும் அன்பு அதிகரிக்கும். பயம், கலக்கம் தவிர்த்தால் மனம் நிம்மதி பெறும். தோழிகளால் நன்மை உண்டு. புதிய வசதிகள் கிடைக்கும்.

மாணவ மணிகள்: நண்பர்களின் உதவியால் வாழ்க்கை வசதிகள் ஏற்படும். உறவினர், ஆசிரியர் உதவியினால் வளர்ச்சி கிடைக்கும். மேன்மை அதிகரிக்கும். வெற்றி உண்டு.

சிறுதொழில், வியாபாரம்: பங்குதாரர்களுடன் பகைமை ஏற்படும். அரசு ஊழியர்களால் சங்கடங்களை சந்திக்க நேரிடலாம்.

அரசியல்வாதிகள்: தைரியத்துடன் செயல்பட வேண்டும். நடத்தையில் நாணயம் தேவை. பொன், பொருள் பாதுகாக்கவும்.

மகரம்:

உத்தியோகஸ்தர்கள்: எதையும் சாதிக்கும் திறமையும் சாமர்த்தியமும் அதிகரிக்கும். சிலருக்கு அதிகாரம் மிக்க பதவி கிடைக்கும். புதிய நண்பர்களால் நன்மை அதிகரிக்கும். அனைவரிடமும் அன்புடனும், விட்டுக்கொடுத்தும் நடந்து கொள்வீர்கள்.

பெண்மணிகள்: பிறந்த  வீட்டிற்குச் சென்று வரும் பெண்களுக்கு மகிழ்ச்சியுடன் இருப்பார்கள். ஆபரணங்கள் வாங்கி மகிழ்வார்கள். தாய்மாமன் வகையிலும் உதவி கிடைக்கும். வேற்றுமொழிக்காரர்களால் முன்னேற்றத்திற்கான பாதை தெரியும்.

மாணவ மணிகள்: பகுதி நேர பணிகளால் வருமானம் கிடைக்கும். பிரச்சினைகள் நீங்கி நிம்மதி கிடைக்கும்.

சிறுதொழில், வியாபாரம்: தொழிலில் உயர்வு கிடைக்கும். கணக்குப் பதிவுகளில் அதிக அக்கறை தேவை. நேரிடையாக தொழிலை கவனிக்கவும்.

அரசியல்வாதிகள்: உயர் பதவியை எட்டமுடியும். தொழிலுக்காக வாகனங்கள் வாங்கலாம். பங்குதாரர்கள் புதிதாக இணைவார்கள்.

கும்பம்:

உத்தியோகஸ்தர்கள்: வாக்கு வலிமையால் அனைவரையும்  எளிதில் வெல்வீர்கள். உயரதிகாரிகளால் பாராட்டு கிடைக்கும். விருப்பங்கள் பூர்த்தி ஆகும். பொருளாதாரம் ஓங்கும், வசதிகள் அதிகரிக்கும். காரியங்கள் வெற்றி அடையும்.

பெண்மணிகள்: இளம்  பெண்களுக்கு மகட் பேறு உண்டாகும். இளவயதினர்க்கு திருமண பாக்கியம் கிடைக்கும். பரிசுப் பொருட்கள் கிடைக்கும். முகம் பொலிவுறும். சுதந்திரத்தை நேர்மையாக அனுபவித்தால் பிரச்சினைகளை தவிர்க்கலாம்.

மாணவ மணிகள்: குண மேன்மை செயல்திறன் இவற்றாலேயே கடினமான செயல்களையும் சாதித்துக் காட்டுவீர்கள். புத்தொளியுடன் திகழ்வீர்கள்.

சிறுதொழில், வியாபாரம்: தனலாபம் அதிகரிக்கும். பயணத்தாலும், வாணிபத்தாலும் பொருளாதாரம் உயரும். ஆரோக்கியம் மேம்படும்.

அரசியல்வாதிகள்: புதிய பதவி கிடைக்கும். தலைமை ஆதரிக்கும்.

மீனம்:

உத்தியோகஸ்தர்கள்: சுலபமாக நிறைவேற வேண்டிய பணிகள் தாமதமாக நடைபெறும். வாக்குவாதங்களை தவிர்க்கவும். பிறருக்கு உத்தரவாதம் தருவதால் பிரச்சினை ஏற்படும். தேவையற்ற வீண் செலவுகளை தவிர்ப்பது நல்லது.

பெண்மணிகள்: வீட்டிலும், வெளியிலும் காயங்கள் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள். தீக்காயம் ரண காயம் உண்டாகலாம் என்பதால் எச்சரிக்கையுடன் இருக்கவும். உங்கள் பெயரில் வீடு, மனை வாங்கலாம். பத்திரங்களை சரிபார்த்து வாங்கவும்.

மாணவ மணிகள்: புத்திசாலித்தனத்துடன் செயல்பட வேண்டும். மறதி ஏற்படாமல் இருக்க பயிற்சி தேவை. கவனச்சிதறல் இல்லாமல் படிப்பில் கவனம் வைக்கவும்.

சிறுதொழில், வியாபாரம்: கடினமாக உழைத்தாலும், அதற்கேற்ப பலன் கிடைக்க தாமதமாகும். வார இறுதியில் நற்செய்தி கிடைக்கும். பண பலம் அதிகரிக்கும்.

அரசியல்வாதிகள்: முன்கோபத்தை தவிர்த்து இணக்கமாக செயல்படவும். தலைமையின் ஆதரவு கிடைக்க தாமதமாகும்.