சட்டபேரவை தேர்தலையொட்டி பிரச்சாரம் செய்ய புறப்பட்ட திமுகவின் வாரிசு தலைவர் உதயநிதி ஸ்டாலின் தருமபுரி ஆதீனத்திடம் ஆசி பெற்றார். ஆதீனமும் உதயநிதிக்கு திறுநீறு பூசி ஆசியளித்தார். ஆனால் இதே உதயநிதி கயிலாசநாதர் கோயில் சார்பாக அளிக்கப்பட்ட பூரண கும்ப மரியாதையை ஏற்க மறுத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடவுள் நம்பிக்கை இல்லாதவர் என்றால் ஆதீனத்தை சந்தித்தது ஏன்? கடவுள் நம்பிக்கை உடையவர் என்றால் பூரண கும்ப மரியாதையை ஏற்க மறுத்தது ஏன்?
இந்நிலையில் கைதுக்கு பிறகு அவர் பேசியுள்ள ஒரு வீடியோவில், எங்களுக்கு தெரியாத காவல்துறையா, இன்னும் ஐந்து மாதம்தான் இருக்கிறது என ‘நாங்கள் ஆட்சிக்கு வந்தால் காவலர்களை பழிவாங்குவோம்’ என்ற தொணியில் காவல்துறையை மிரட்டியிருக்கிறார் உதயநிதி.