வழிகாட்டும் கர்நாடகா

கர்நாடகாவில் உள்ள ஏழை பிராமணர்களுக்கான உதவி திட்டத்தை அம்மாநில அரசு முன்னெடுத்துள்ளது. இதற்காக ‘அருந்ததி, மைத்ரேயி’ ஆகிய இரண்டு திருமண திட்டங்களை தொடங்க, கர்நாடக மாநில பிராமண மேம்பாட்டு வாரியம், அரசின் ஒப்புதலை பெற்றுள்ளது. முதல் திட்டத்தில் பொருளாதார ரீதியாக பின் தங்கியிருக்கும் அர்ச்கர்களை திருமணம் செய்யும், 25 பிராமண பெண்களுக்கு, தலா ரூ. 3 லட்சம் நிதி பத்திரங்கள் வழங்கப்படும். இரண்டாவது திட்டத்தின் படி, பொருளாதார ரீதியாக பலவீனமான குடும்பங்களைச் சேர்ந்த, 550 பெண்களின் திருமணத்திற்கு தலா ரூ. 25,000 நிதி உதவி வழங்கப்படும். பிராமண மேம்பாட்டு வாரியத் தலைவர் சச்சிதானந்தமூர்த்தி இதுகுறித்து கூறுகையில், ‘அருந்ததி, மைத்ரேய் திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ள மாநில அரசு, அதற்கு நிதியும் ஒதுக்கியுள்ளது. சமூகத்தில் பலவீனவர்களுக்கு உதவும் வகையில் எங்களது இந்த முயற்சி இருக்கும்’ என்றார். கர்நாடக மக்கள் தொகையில், சுமார் 3 சதவீதம் பேர் பிராமண சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.