வளர்ச்சி பாதையில் காஷ்மீர், லடாக்

சீன எல்லையில் உள்ள ஒரு முக்கிய இடம் லடாக். இதன் நிலங்கள், மொழி, கலாச்சாரம் பாதுகாப்பு, அங்குள்ள மக்களின் வேலைவாய்ப்பு, வளர்ச்சி குறித்து உள்துறை அமைச்சர் அமீத்ஷாவை அப்பிரதேசத்தை சேர்ந்த குழு ஒன்று சந்தித்து பேசியது. அப்போது, லடாக்கின் மொழி, கலாச்சாரம், நிலத்தை பாதுகாக்க மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது. இதற்கென தனியாக ஒரு குழு ஏற்படுத்தப்படும் என அமீத்ஷா தெரிவித்துள்ளார். மேலும் காஷ்மீர்  மக்களின் தொழில் வளர்ச்சிக்கு ரூ. 28,400 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதன் வாயிலாக 4.50 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இதனால், இப்பகுதியில், சமூக பொருளாதார வளர்ச்சி, சமத்துவம் ஏற்பட்டு அமைதி நிலவும்.