வளர்ச்சிப் பாதையில் ஆர்.எஸ்.எஸ்

ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் அகில பாரத பிரதிநிதி சபா கூட்டத்தை முன்னிட்டு நடைபெற்ற ஊடகவியலாளர்களுடனான சந்திப்பில், அகில பாரத துணை பொதுச் செயலாளர் டாக்டர் மன்மோஹன் வைத்யா மற்றும் அகில பாரத ப்ரச்சார் ப்ரமுக் சுனில் அம்பேகர் பங்கேற்றனர்.

இந்த சம்திப்பில், நாடெங்கிலுள்ள 911 மாவட்டங்களில் 901ல் சங்கப் பணிகள் நடைபெற்று வருகிறது. நாடெங்கிலுள்ள 6,663 ஒன்றியங்களில்88 சதவீத இடங்களில் சங்க வேலைகள் நடைபெற்று வருகின்றன. 59,326 மண்டல்களில் 26,498ல் சங்க வேலை நடைபெற்று வருகிறது. சங்கப் பணியுள்ள இடங்கள்: 2022ல் 37,903, 2023ல் 42,613. ஷாகா தினசரிக் கூடுதல்: 2022ல்: 60,117, 2023ல்: 68,651. மிலன் எனப்படும் வாராந்திரக் கூடுதல்: 2022ல் 20,826, 2023ல் 26,877. மண்டலி எனப்படும் மாதாந்திரக் கூடுதல்: 2022ல் 7,980, 2023ல்: 10,412 என தெரிவிக்கப்பட்டது.