நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வந்த முத்தலாக் தடை மசோதா பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டுள்ளது . முஸ்லீம் அமைப்புகளை விட ஒருபடி மேலேயே நின்று காங்கிரஸ் திரிணமூல் சமாஜ்வாடிஜனதா, ராஷ்டிரிய ஜனதா தளம், திரிணமூல் காங்கிரஸ் , தமிழகத்தின் திராவிட முன்னேற்றக்கழகம், இரு கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்பட பல சிறுகட்சிகளும் இந்த மசோதாவை தலைகீழாக நின்று எதிர்த்து வந்தது . எனினும் இந்த மசோதா புதிய அரசின் முதலாம் அமர்வில் மக்களவையில் 303 உறுப்பினர்கள் ஆதரவுடனும் மாநிலங்கள99 உறுப்பினர் ஆதரவுடனும் சட்டமாகியுள்ளது.
இந்த சட்டம் சுப்ரீம் கோர்ட் உத்தரவு , நாடு முழுவதும் இந்த பிரச்சனையால் பாதிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான முஸ்லீம் சகோதரிகளின் கண்ணீர் இவையனைத்தும் இந்த மசோதாவை வெற்றிகரமாக நிறைவேற்ற உதவியுள்ளது. சில கட்சிகள் பாராளுமன்றத்தில் எதிர்ப்பதுபோல் பாசாங்கு செய்து பேசிவிட்டு வெற்றிகரமாக வெளிநடப்பு செய்து உதவியுள்ளனர் நல்லது என்று மனதுக்கு தெரியும் என்றாலும் மைனாரிட்டி ஓட்டு வேண்டும் என்ற காரணத்திற்க்காக எதிர்ப்பது போல் காட்டிக்கொள்கிறார்கள். மக்களவையில் சென்ற முறை ஆட்சியின் போதே இந்த முத்தலாக் தடை மசோதாவை நிறைவேற்றய மோடிஅரசு ராஜ்யசபாவில் பெரும்பான்மை இல்லாத நிலையிலும் காலாவதியாகி போனது என்றாலும் இந்த தடவை அதனை வெற்றிகரமாக நிறைவேற்றி காட்டியுள்ளது வரவேற்கத்தக்கது. இந்த மசோதா நிறைவேற நேரடியாக மறைமுகமாக ஒத்துழைத்த அனைவருக்கும் இந்த வெற்றி சென்றடையட்டும் . உலகில் எந்த ஒரு முஸ்லீம் பெரும்பான்மை நாட்டிலும் வழக்கத்தில் இல்லாத இறைத்தூதர் முகமது நபியால் சொல்லப்படாத பழக்கத்தை தங்களது வசதிக்காக ஒரே தடவையில் தலாக் சொல்லும் நடைமுறையை வைத்து இஸ்லாமிய பெண்களை அடிமைகளாக நடத்திவந்த கொடுமை இனிமேலாவது நடைபெறாமல் இருக்கட்டும். அப்படியே மாறாமல் இன்னமும் அதே நடைமுறையை கடைபிடிப்போம் என்பவர்கள் சட்டத்தின் மூலம் சிறைக்கு செல்லட்டும் நாகரிக உலகில் பத்தாம் பசலித்தனத்தோடுதான் இருப்பபோம் மாறவேமாட்டோம் என்று ஒருவன் சொல்லுவேயானால் அவன் இந்த உலகில் வாழத்தகுதி இல்லாதவன் என்றுதான் அர்த்தம்.
இந்து சமுதாயதிலும் கணக்கற்ற மூட நம்பிக்கைகள் இருந்தது அதனை சமுதாய பெரியவர்களே போராடி தீர்த்து வைத்தனர் பால்ய விவாகமாகக்கட்டும் தீண்டாமை விசயமாகட்டும் ,விதவை மறுமணம் பெண்கள் கல்வி , சொத்தில் சமஉரிமை , சதி எனப்படும் உடன்கட்டையாகட்டும் எல்லாமே சமுதாய தலைவர்களின் முயற்சியால் கைவிடப்பட்டு புதியவைகளை சட்டத்தின் வாயிலாக ஏற்றுள்ளோம் . இப்படிப்பட்ட நிலையில் முஸ்லீம் சமுதாயம் இந்த பிரச்னையை ஆணாதிக்க மனோபாவத்தில் பார்க்காமல் தனது மகள், தனது சகோதரி, தனது மனைவி ,தனது அம்மா என்ற கோணத்தில் சிந்தித்து சட்டத்தை ஏற்று கொள்ளவேண்டும் என்பதே ஓட்டுமொத்த இந்திய மக்களின் விருப்பம்.