வேலுநாச்சியாருக்கும் சிவகங்கை இளைய மன்னர், முத்தவடுகநாதர் தேவருக்கும் திருமணம் நடந்தது. நிராயுத பாணியான முத்து வடுகநாதரை திட்டமிட்டு கொலை செய்தனர் ஆங்கிலேயர்கள். இதனையடுத்து தலைமறைவு வாழ்க்கை நடத்தினார். 1780-ல் வியூகம் அமைத்து போர் செய்து வெற்றி பெற்றார் வேலு நாச்சியார். இதற்கு அவருடைய வீரம் மட்டுமல்ல, விவேகமும் காரணம். குயிலி, மருது சகோதரர்கள், கோபால நாயக்கர் போன்றோர் வேலுநாச்சியாருக்கு உறுதுணையாக இருந்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள்.
ராணி வேலு நாச்சியாரின் நினைவு தினம் இன்று.