ரயில்வே வருவாய் அதிகரிப்பு

கடந்த அக்டோபர் மாதத்தில் ரயில்கள் மூலம் 117.34 மில்லியன் டன் சரக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. இது கடந்த ஆண்டு அக்டோபரில் கொண்டு செல்லப்பட்ட 109.01 மில்லியன் டன்னைவிட 7.63% அதிகம். கடந்த அக்டோபர் மாதத்தில் இந்திய ரயில்வே, சரக்கு போக்குவரத்தின் மூலம் ரூ.12,311.46 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. இது கடந்த ஆண்டு இதே கால வருவாய் ரூ.10,416.60 கோடியைவிட 18.19% அதிகம். கடந்த அக்டோபர் மாதத்தில் 54.65 டன் நிலக்கரி, 12.80 மில்லியன் டன் இரும்புத்தாது, 6.30 டன் உணவு தானியங்கள், 4.18 மில்லியன் டன் உரங்கள், 3.9 டன் பெட்ரோலியப் பொருட்கள் மற்றும் 7.37 மில்லியன் டன் சிமெண்ட் ஆகியவற்றை இந்தியன் ரயில்வே கொண்டு சென்றுள்ளது. சரக்குப் போக்குவரத்துக்கு ஏராளமான தள்ளுபடிகள் மற்றும் கட்டணச் சலுகைகளை இந்திய ரயில்வே அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.