ரபேல் விமானத்திற்கு சந்தன பொட்டு வைத்து ஆயுத பூஜை

ரபேல் விமானத்தை பிரான்சிடமிருந்து பெற்ற ராஜ்நாத் சிங், விமானத்திற்கு பொட்டு, பூக்கள் வைத்து ‘சாஸ்த்ர பூஜா’ நடத்தினார். பின் ரபேலில் ராஜ்நாத் பறந்தார்.

Defence Minister, Rajnath Singh,France,Shastra Puja, Rafale, combat jet,ரபேல், சாஸ்த்ர பூஜா

இந்திய விமானப்படைக்கு வாங்கப்பட உள்ள 36 ரபேல் போர் விமானங்களில், முதல் விமானத்தை, பிரான்ஸ் சென்றுள்ள மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று ( அக்.,8) பெற்று. நம் நாட்டில் நவராத்திரி பண்டிகையின் ஒரு பகுதியாக, ஆயுத பூஜையும் கொண்டாடப்படுகிறது. இதையடுத்து, ரபேல் விமானத்தில், ‘சாஸ்த்ர பூஜா’ எனப்படும், ஆயுத பூஜையை, ராஜ்நாத் சிங் நடத்தினார்.

ரபேல் விமானத்திற்கு சந்தன பொட்டு வைத்து, முன் பகுதியில் தேங்காய், பூக்கள் வைத்து, ஓம் என்று ஹிந்தியில் ராஜ்நாத் சிங் எழுதினார். ரபேல் விமானத்துக்கு கயிறு கட்டிய பின், டயருக்கு அடியில் எலுமிச்சை பழம் வைத்து பூஜை செய்யப்பட்டது.

தொடர்ந்து உரிய பாதுகாப்பு கவசங்கள் அணிந்து, இந்தியாவின் முதல் ரபேல் போர் விமானத்தில், ராஜ்நாத் சிங் பறந்தார்.

ரபேலில் பறந்த பின், செய்தியாளர்களிடம் ராஜ்நாத்சிங் கூறியதாவது: நான் சூப்பர் சோனிக் விமானத்தில் பறப்பேன் என என்றும் நினைத்தது இல்லை. விமானத்தில் பயணிப்பது வசதியாகவும், மென்மையாகவும் இருந்தது.