ரஜினி கொளுத்திபோட்ட பட்டாசு – அல்லோகல்லப்படும் பகுத்தறிவு கூட்டம்

துக்ளக் ஆண்டு  விழாவில் நடிகர் ரஜினிகாந்த 1972 ஆம் ஆண்டு சேலத்தில் நடைபெற்ற பகுத்தறிவு இயக்க மாநாட்டின்  ஊர்வலத்தில் எடுத்து செல்லப்பட்ட அலங்கார ஊர்திகளில் கடவுள் ராமர் சிலையை  செருப்பால் அடித்து அவமதித்த செயல்கள் நடந்தது என்று பேசினார். அன்று இருந்த அரசின் முழு ஆதரவோடு செய்யப்பட அக்கிரமத்தை முப்பது ஆண்டுகளுக்கு பிறகு எடுத்து சொல்லி நினைவூட்டியதும் சிலருக்கு கோபம் கொப்பளிக்கிறது. ஆத்திரம் தலைக்கேறி பெரியாரை அவமதித்து விட்டீர்கள் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றெல்லாம் பிதற்றுகின்றனர்.

உண்மையை எத்தனை ஆண்டுகள் கழித்து சொன்னாலும் உண்மை உண்மைதான் என்பதனை கூட மறுப்பவர்கள் எத்தகைய மனப்பான்மை கொண்டவர்கள் என்பதனை மக்கள் அறியும் நேரம் இது. பெரியார் அன்றைய இன்றைய ஆட்சியாளர்களின் வழிகாட்டியாக, தலைவராக இருக்கலாம் ஆனால், அவர் எப்போதும் பொது மக்களின் தலைவனாகிவிட முடியாது. ஒரு சிலருக்கு தலைவனாக வழிகாட்டியாக இருப்பவர்கள் ஒருசிலருக்கு தேவை இல்லாதவர்களாகவும் இருப்பார்கள் என்ற உண்மையைக்கூட இவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

இவர்கள்தான் மற்றவர்களுக்கு சகிப்புத்தன்மை பற்றி பாடம் எடுப்பவர்கள் ஆண்டாள் விஷயத்தில் திட்டமிட்டு பொய்யுரைத்த அவதூறு பரப்பிய வைரமுத்துவை கண்டிக்காது ஆன்மிக மக்களின் மனது புண்படுமே என்ற எண்ணம் இல்லாதவர்கள் 30 ஆண்டுகளுக்கு முன்பு அவர்கள் செய்த ஆக்கிரமத்தை சொல்லிக்காட்டியதும் அது தவறுதான் என்று ஒத்துக்கொள்ளாமல் அப்படி நடக்கவே இல்லை அது பொய் என்று மறுப்பு தெரிவிப்பது ஏன். ஓன்று வீரமாக ஆமாம் அப்படித்தான் செய்வோம் என்று ஏற்றுக்கொள்ளவேண்டும், இல்லையேல் அன்று தெரியாமல் செய்து விட்டோம் என்று தவறுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் அதனை செய்யாது எப்போதோ நடந்ததை அதனை  இப்போது எதற்கு சொல்லவேண்டும், இவரை யாரோ பின்னல் இருந்து ஆட்டுவிக்கிறார்கள் என்று ஒருபக்கமும் மற்றொரு பக்கத்தில் இருந்து அப்படியொரு சம்பவமே நடக்க வில்லை என்று முழு பூசணிக்காயை சோத்தில் மறைக்க செய்யும் முயற்சியும் நடைபெறுகிறது.

இப்படி அந்த கூட்டம் பதறிப்போய் ஆளாளாளுக்கு ஒன்றை சொல்லும்போது ஓன்று மட்டும் உண்மையாகிறது அதாவது மூடநம்பிக்கை என்றும் பகுத்தறிவு என்றும் இவர்கள் ஹிந்து சமயத்தின் மீது சொல்லிய ஏவிய பேச்சுக்கள் அவமானங்கள் அநாகரீகங்கள் எல்லாம் மீண்டும் அவர்களை நோக்கி தாக்க தொடங்கியுள்ளது. இந்த மற்றம் 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஹிந்து இயக்கங்களின் அமைதியான பணியாது தற்போது பலனளிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு ஹிந்துவும் இன்று சித்திக்க தொடங்கியுள்ளான். எவனாவது எதையாவது எப்படிவேண்டுமானாலும் பேசிவிட்டு போகட்டும் என்று கண்டும் காணாமலும் போக  இன்றைய ஹிந்து தயாராகவில்லை.

பாதகம் செய்பவரை கண்டால் நீ பயம் கொள்ளலாகாது பாப்பா மோதி மிதித்துவிடு பாப்பா அவர் முகத்தில் உமிழ்ந்துவிடு [பாப்பா என்ற மகாகவி பாரதியாரின் கூற்றுக்கு உதாரணமாக திகழ்கின்றனர். நெல்லிக்காய் மூட்டை போல சிதறுண்டு இருந்த இந்து சமுதாயம் இன்று தனக்கு ஒரு அவமானம் ஆபத்து என்றால் ஒன்றிணைந்து எதிர்க்க போராட தயாராகிவிட்டது என்ற உண்மையை  அவர்களால்  ஜீரனிக்க முடியவில்லை. அதனால்தான் உண்மை என்று தெரிந்திரும் அறிக்கை வெளியிட்டு உளறுகின்றனர்.   30 ஆண்டுகளுக்கு முன்பு வெளியிட்டு இருந்த  அன்றைய பதிவுகளை தினமணி தினத்தந்தி தி ஹிந்து உள்ளிட்ட பத்திரிக்கைகள் மறுபதிப்பு செய்து வரும் நிலையிலும் பொய்யான கட்டுக்கதை என்று அறிக்கை வெளியிடும் தலைவர்களின் நடவடிக்கைகள்    தங்களது சாயம் வெளுத்துவிடுமோ என்ற அச்சத்தின் வெளிப்பாடாக உள்ளது என்பதனை காணமுடிகிறது.