மார்னிங் கன்சல்ட் என்ற அமெரிக்காவை சேர்ந்த மார்னிங் கன்சல்ட் பொலிட்டிகல் இன்டலிஜென்ஸ் அமைப்பு, கடந்த மார்ச் 18 அன்று ஒரு கருத்துக் கணிப்பை வெளியிட்டது. அந்நிறுவனம் நடத்திய ஆய்வுக்கு உலகின் பிரபலமான முக்கிய 13 தலைவர்கள் எடுத்துக்கொள்ளப்பட்டனர். அந்த கருத்துக் கணிப்பில் 77 சதவீத வாக்குகளுடன் பாரதப் பிரதமர் மோடி தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். மெக்சிகோவின் ஆண்ட்ரேஸ் மானுவல் லோபஸ் ஒப்ராடோர் 63 சதவீதத்துடன் இரண்டாவது இடத்திலும், இத்தாலியின் மரியோ டிராகி 54 சதவீதத்துடன் 3ம் இடத்திலும், ஜப்பானின் ஃபுமியோ கிஷிடா 45 சதவீதத்துடன் 4ம் இடத்திலும் உள்ளனர். கனடாவின் ஜஸ்டின் ட்ரூடோ 42 சதவீதத்துடன் ஆறாவது இடம், அமெரிக்க அதிபர் ஜோ பிடன் 41 சதவீதத்துடன் ஏழாவது இடத்தில் உள்ளனர். பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் 33 சதவீதத்துடன் கடைசி இடத்தைப் பிடித்தார். மேலும், இப்பட்டியலில் பிரதமர் மோடி மட்டும்தான் மிகக் குறைந்த அளவாக 17 சதவீத எதிர்ப்பு மதிப்பீட்டைப் பெற்றுள்ளா என்பது குறிப்பிடத்தக்கது.