மோடியுடன் வீராங்கணைகள் சந்திப்பு

பாரதத்தின் குத்துச்சண்டை உலக சாம்பியனான நிகத் ஜரீன் மற்றும் சமீபத்தில் இஸ்தான்புல் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற சக வீரர்களான மனிஷா மவுன் மற்றும் பர்வீன் ஹூடா ஆகியோர் பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து வாழ்த்து பெற்றனர். ப்ளைவெயில் (52 கிலோ) பிரிவில் நிகத் தங்கம் வென்றார். மனிஷா மற்றும் அறிமுக வீராங்கனை பர்வீன் முறையே 57 கிலோ மற்றும் 63 கிலோ பிரிவுகளில் வெண்கலப் பதக்கம் வென்றனர். வீராங்கணைகள் பிரதமர் மோடியுடன் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டனர். பின்னர், பிரதமர் மோடி வீராங்கணைகள் அணிந்திருந்த டி சர்ட்டுகளின் கை பகுதியில் கையெழுத்திட்டு வாழ்த்து தெரிவித்தார். இதுகுறித்து கருத்துத் தெரிவித்த பிரதமர் மோடி, ‘பெண்கள் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில் பாரதத்தை பெருமைப்படுத்திய குத்துச்சண்டை வீரர்களான நிகத் ஜரீன், மனிஷா மற்றும் பர்வீன் ஹூடா ஆகியோரை சந்தித்ததில் மகிழ்ச்சி. விளையாட்டு மற்றும் அதைத் தாண்டிய வாழ்க்கையின் மீதான ஆர்வம் உள்பட அவர்களின் வாழ்க்கைப் பயணங்கள் குறித்து நாங்கள் சிறப்பாக உரையாடினோம். அவர்களின் எதிர்கால முயற்சிகளுக்கு வாழ்த்துகள்’ என்று தெரிவித்தார். பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்த வீராங்கணைகள், தங்களது டுவிட்டர் பக்கத்தில் “எங்கள் மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தது மரியாதைக்குரியது. உங்கள் வாழ்த்துகளுக்கும், ஆதரவிற்கும் நன்றி” என்று குறிப்பிட்டுள்ளனர்.