மேற்கு வங்கத்தில் மேதினிப்பூர் மாவட்டத்தில் உள்ள பூபதி நகர் பகுதியில் உள்ள திருணமூல் காங்கிரஸ் கட்சியின் உள்ளூர் தலைவர் ராஜ்குமார் மன்னா என்பவரது வீட்டில் நேர்று காலை நிகழ்ந்த குண்டு வெடிப்பில் 3 பேர் உயிரிழந்தனர், இருவர் படுகாயம் அடைந்துள்ளனர். மேற்கு வங்க சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரியின் பூர்விக வீட்டின் அருகில் இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது.குண்டுவெடிப்பு நிகழ்ந்த இடத்தில் இருந்து சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது கான்டாய் எனும் நகரம்.இந்த நகரத்தில் நேற்று நடைபெற இருந்த பொதுக்கூட்டத்தில், திருணமூல் காங்கிரஸ் தலைவர் அபிஷேக் பேனர்ஜி பங்கேற்க இருந்தார்.இந்நிலையில், இந்த குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த குண்டுவெடிப்பு குறித்து டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள சுவேந்து அதிகாரி, “திருனமூல் காங்கிரஸ் கட்சியின் பூத் தலைவர் ராஜ்குமார் மன்னாவின் வீட்டில்தான் குண்டுவெடித்துள்ளது. அவர் வெடிகுண்டை தயாரித்துக்கொண்டிருந்தபோது அது வெடித்துள்ளதாக தெரிகிறது.இந்த குண்டுவெடிப்பில் ராஜ்குமார் மன்னாவும், மேலும் இருவரும் உயிரிழந்துள்ளனர்.தற்போது திருணமூல் ஆட்ச்யில், வெடிகுண்டு தயாரிப்பது என்பது வெற்றிகரமான குடிசைத் தொழிலாக மேற்கு வங்கத்தில் உருவெடுத்துள்ளது.இதை தயாரிப்பவர்கள் பெரும்பாலும் அந்த கட்சியை சேர்ந்த உள்ளூர் தலைவர்கள்தான்.இந்த குண்டுவெடிப்பு குறித்து என்.ஐ.ஏ விசாரணை நடத்த வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.