மேம்பட்டகடல் முன்னறிப்பு

நம் பாரதத்தை சேர்ந்த புவி அறிவியல் அமைச்சக விஞ்ஞானிகள் அதிக திறன் கொண்ட (HOOFS) கடல் முன்னறிவிப்பு முறையை உருவாக்கியுள்ளனர். இது கடல் வானிலை முன்னறிவிப்பு, மீன் பிடித்தல், கப்பல் போக்குவரத்து, கடலோர காவல், நீரோட்ட மாறுபாடு, எண்ணை படலம் ஆகியவற்றை மிக துல்லியமாக கண்காணிக்க உதவும். உலகில் இதைப்போன்ற 12க்கும் மேற்பட்ட அதிகத்திறன் கொண்ட  அமைப்புகள் உள்ளன. நம் பாரதத்தின் இந்த புதிய கண்டுபிடிப்பு அவைகளில் இருந்து அதிக வெளிப்படைத் தன்மை கொண்ட அமைப்பாக மாறுபட்டு உள்ளது என்பது இதன் சிறப்பம்சம்.

பாரதத்தின் புதிய அறிவியல் கண்டுபிடிப்புகள், உலக அரங்கில் நம்மை பெருமைப்படுத்துகின்றன.