முஸ்லீம் சட்ட வாரியத்தின் அடாவடித் தனம்

உச்ச நீதி மன்றத்தின் தலைமை நீதிபதி தலைமையில் அமைத்த அரசியல் சாசன அமர்வு, கடந்த 9ந் தேதி, வழக்கு தொடுத்த இஸ்லாமியர்களின் மனுக்களை தள்ளுபடி செய்து, அயோத்தியில் ராமர் ஆலயம் அமைக்க உத்திரவு  வழங்கியது.  இந்த தீர்ப்பை மறு ஆய்வு செய்ய, முஸ்லீம் தனி நபர்  சட்ட வாரியம், உச்ச நீதிமன்றத்தில்  சீராய்வு மனு தாக்கல் செய்ய முன் வந்துள்ளது.  முஸ்லீம் தனி நபர் சட்ட வாரியத்தின்  பொதுச் செயலர், மவுலானா வாலி ரஹ்மானி நிருபர்களிடம் கூறிய ஒரு கருத்து, வாரியத்தின் அடாவடித் தனத்தை காட்டுகிறது.  அயோத்தியில் உள்ள சர்சைக்குறிய நிலம், ஷரியத் சட்டப்படி , அல்லாவுக்கு சொந்தமானது.  இதை வேறு யாருக்கும் வழங்க முடியாது.  சர்ச்சைக்குறிய நிலத்தில் மீண்டும் மசூதி கட்டுவதைத் தவிர, வேறு எந்த தீர்வையும் ஏற்க முடியாது என தெரிவித்தார்.   பாரத தேசத்தில் ஆக்கிரமித்தவர்கள் இஸ்லாமியர்கள்.  ஆயிரக்கணக்கான கோவில்களை இடித்து விட்டுதான் மசூதி கட்டப்பட்டது என்பது வரலாற்று உண்மை.   எவ்வாறு அல்லாவுக்கு சொந்தமானது என கூற முடியும்.  உலகில்  பல நாடுகளில், குறிப்பாக சீனா, ஈராக், ஈரான், எகிப்து போன்ற நாடுகளில் மசூதிகள் இடிக்கப்பட்டன.  இடிக்கப்பட்ட மசூதி இடங்களில் மசூதி கட்டவில்லை என்பதையும்  கவனிக்க வேண்டும்

                ஷரியத் சட்டப்படி மசூதி கட்டப்பட்ட நிலம் அல்லாவுக்கு சொந்தமானது என்றால், சீனா, ஈரான், ஈராக், பாகிஸ்தான் போன்ற நாடுகளில் இடிக்கப்பட்ட மசூதிகள் அல்லாவுக்கு சொந்தமானது இல்லையா என்றால் , ஏன் இஸ்லாமியரே அல்லாவுக்கு சொந்தமான மசூதியை இடிக்க வேண்டும்.

          2016 முதல் 2018 வரை சீனாவின் ஜிங்ஜாங் மாவட்டத்தில் சுமார் 31 மசூதிகள் இடிக்கப்பட்டுள்ளன.  இடிக்கப்பட்ட மசூதிகளில் பழைமை வாய்ந்த இமாம் அஸிம் மசூதியும் ஒன்றாகும்.    இடிக்கப்பட்ட 31 மசூதிகளில், 15 மசூதிகள் முற்றிலும் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது.  சீனாவின் உதவியுடன் வாழ்ந்து வரும் பாகிஸ்தான்  இஸ்லாமியர்கள் ஏன் குரல் கொடுக்கவில்லை.   இந்தியாவில் மசூதி இடிக்கப்பட்டால் அந்த இடத்தில் மசூதிதான் கட்ட வேண்டும் என இஸ்லாமியர்கள் கதறுவது எதனால்.  மதசார்பற்ற  போர்வையில் உலா வரும் அரசியல் வாதிகளின் ஆதரவு என்பதால் தான் கூச்சலிடுகிறார்கள்..  சீனாவில் கட்டப்பட்டுள்ள மசூதிகள் அல்லாவுக்கு சொந்தமான என ஷரியத் சட்டம் கூறவில்லையா?

          ஈரான் ஆட்சியாளர்கள் ஷியா பிரிவைச் சார்ந்தவர்கள்.  அல்லாவை தொழுகின்ற சன்னி பிரிவு இஸ்லாமியர்களின் மசூதிகளை இடித்து விட்டு, அவ்விடத்தில் ஷாப்பிங் காம்ளக்ஸ் கட்டப்பட்டுள்ளது.  சன்னி இஸ்லாமியர்கள் அதிகமாக வாழும் தெஹ்ரானில் உள்ள சன்னி மசூதிகள் இடிக்கப்பட்டு விட்டன.  ஈரான் அரசாங்கத்தின் புள்ளி விவரப்படி, 10,344 சன்னி மசூதிகள் இடிக்கப்பட்டுள்ளன.  சிறுபான்மையினரான சன்னி இஸ்லாமியர்கள் மசூதி கட்டுவதற்கு கூட ஈரானிய அரசாங்கம் அனுமதி அளிப்பதில்லை.   1979-ல் புரட்சி ஏற்பட்ட போது, அயத்துல்லா  கோமெனி  சிறுபான்மையின சன்னி இஸ்லாமியர்கள் மசூதி கட்டிக் கொள்ளலாம் என வாக்குறுதி கொடுத்தாலும், ஆட்சிக்கு வந்தவுடன், ஈரான் அரசாங்கம் அல்லாவை தொழும் சன்னி இஸ்லாமியர்கள்  மசூதி கட்ட அனுமதிப்பதும் கிடையாது. பழங்கால மசூதிகளும் இடிக்கப்பட்டுள்ளன.  இதற்கு விளக்கம் கொடு்க்க இஸ்லாமிய தனி நபர் சட்ட வாரியம் முன் வருமா என்ற கேள்வி இயற்கையாகவே எழுகிறது.

          ஈராக்கில் 842 வருட பழைமையான அல்-நுருல் மசூதியை ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பினர் தரைமட்டமாக்கினார்கள்.   ஈராக்கின் அடையாளமாகவும், மோசூல் நகரின் நாகரீகத்தின் சின்னமாகவும் விளங்கிய மசூதியை இடித்து விட்டார்கள்.  ஈராக்கில் உள்ள முஸ்லீம் தனி நபர் சட்ட வாரியம் ஏன் வக்காலத்து வாங்கவில்லை.

           1974 பாகிஸ்தான் அரசாங்கமானது, அகமதிய முஸ்லீம்கள் சிறுபான்மையினர் என அறிவித்தவுடன், பால்வல்பூர் மாவட்டத்தில் ஹசில்பூர் கிராமத்தில் உள்ள பழைமையான அகமதிய முஸ்லீம்களின் மசூதி இடிக்கப்பட்டது, மீன்டும் மசூதி கட்ட அனுமதிக்கவில்லை.    முகமது நபி வாழ்ந்த, மெக்கா மற்றும் மதீனா அமைந்துள்ள சௌதி அரேபியாவில்  வரலாற்று சிறப்பு மிக்க மசூதிகள் 98 சதவீதம் இடிக்கப்பட்டுவிட்டன.  முகமது நபி வாழ்ந்த காலத்தில் கட்டப்பட்ட  நூற்றுக் கணக்கான மசூதிகள், மதீன மசூதியை விரிவாக்கம் செய்யப்பட வேண்டும் என்பதற்காக இடிக்கப்பட்டது.  இடிக்கப்பட்ட மசூதி பகுதிகளில் யாத்திரிகர்கள் தங்குவதற்கு கூடங்கள் அமைப்படுகின்றன.  அயோத்தியில் இடிக்கப்பட்ட இடத்தில் தான் மசூதி கட்ட வேண்டும் என்றால், முகமது நபி பிறந்த சௌதி அரேபியாவில் , இடிக்கப்பட்ட மசூதி மீன்டும் கட்ட வேண்டும் என குரல் கொடுப்பார்களா .  இது பற்றி தி கார்டியன் பத்திரிக்கையில் 2017ல் வெளி வந்த ஒரு செய்தி, கடந்த சில ஆண்டுகளில் ஒட்டோமான் கால மாளிகைகள், பழங்கால கிணறுகள், மற்றும் கல் பாலங்கள் போன்ற முஹம்மதுவின் காலத்திலிருந்த மசூதிகள் மற்றும் முக்கிய மத தளங்கள் அழிக்கப்பட்டன் என லன்டனில் உள்ள இஸ்லாமிய பாரம்பரிய ஆராய்ச்சி அறக்கட்டளை மதிப்பிடுகிறது என வெளியிட்டது.   இந்தியாவில் முஸ்லீம்களுக்கு பாடுபடுவதாக கூறிக் கொள்ளும் இஸ்லாமிய தனி நபர் சட்ட வாரியம், சௌதி அரேபியா மற்றும மற்ற இஸ்லாமிய நாடுகளில் மசூதியை இடித்துவிட்டு பல வியாபார நிறுவனங்கள் கட்டப்பட்டுள்ள  செயல்பாடுகள் நியாயமானவையா என்பதை விளக்கி விட்டு, அயோத்தி தீர்ப்புக்கு  சீராய்வு மனு தாக்கல் செய்யலாம்.