முகமூடிக்குப் பின்னால் ஒளிந்திருக்குது ஆபத்து – பாகம் 3

பிரபல பத்திரிகையாளர் எஸ். குருமூர்த்தி , தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் ஏப்ரல் 2, 2020 தினசரியில் Tablighi Jamaat – its other, evil side என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையின் தமிழாக்கம் இன்று மூன்றாம் ( நிறைவு  )பாகம்.
(தமிழில்: வேம்படியான்)
உலுக்கும் உண்மை
சிந்தனையாளர் – எழுத்தாளர் பிரவீன் ஸ்வாமி
மவுலானா சாத் கந்தால்வி
கடந்த ஆண்டு ஸ்ரீ லங்காவில் நடந்த குண்டுவெடிப்பு

 

கொரானா கொதிகலன் – நிஜாமுதீன் தலைமையகம்

இன்று, 80 நாடுகளில் 8 கோடி தொண்டர்களைக் கொண்ட விஷ நிறுவனத்தின் துவக்கம் எங்கே தெரியுமா? இந்தியாவின் தலை நகரானா தில்லியின் மேற்கு நிஜாமுத்தீன் பகுதியில் 1920ல் துவக்கப்பட்டது. இதை நிறுவியவர் யார்? இந்தியன். பெயர்? மவுலானா முகமது இலியாசி.

மலேசியா, தாய்லாந்து, இந்தோனேசியா, சீனா மற்றும் பிற கொரோனா வைரஸ் ஹாட்ஸ்பாட்களில் இருந்து நூற்றுக்கணக்கான தப்லிகிகள் பங்கேற்ற அதன் வருடாந்திர சந்திப்பு இடம். நிஜாமுதீன். ஒரு கடுமையான மற்றும் ஆபத்தான தேசிய அச்சுறுத்தலாக வெடிக்கும் வரை இந்த கொரானா பாதிப்பு இந்தியாவில் வியக்கத்தக்க வகையில் கட்டுப்பாட்டில் இருந்தது. இந்தியாவில் அதன் தலைமையகத்துடன் கூடிய  தப்லிகி ஜமாத்   இப்போது 80 நாடுகளில் 80 மில்லியன் ஆதரவாளர்களுடன் செயல்படுகிறது. “தப்லிகி ஜமாத்: ஆடு தோல் போர்த்திய ஓநாய்” என்ற செப்டம்பர் 9, 2018  தேதியிட்ட    173 பக்க சிறப்புக்கட்டுரையில் பல விருதுகளை வென்ற ஜிஹாதி எதிர்ப்பு பத்திரிகையாளரும், பயங்கரவாத எதிர்ப்பு நிபுணருமான சலா உதீன் சோயிப் சவுத்ரி, த ஜவின் ஆள் பலம் – செல்வாக்கையும் அவிழ்த்து விடுகிறார்.  சோயிப் சவுத்ரி   நிஜாமுதீன் விவகாரத்திற்குப் பிறகு மீண்டும் ஊடகங்களுக்கு வெளியிட்டார்.ஆண்டுதோறும் இந்திய நாட்டிற்கு உள்ளேயும் வெளியேயும் அவர்கள் ஒன்று கூடுகின்றனர். தாய்லாந்து, சீனா, மலேஷியா, இந்தோனேஷியா போன்ற கொரானா கொதிக்கலன்களான நாடுகளில் இருந்து தில்லிக்கு வந்து அமைதியான வழியைப் போதிப்பதற்காகவே அவர்கள் கூடுகிறார்கள் என்று இன்னுமா நம்புகிறீர்கள்? டாக்டர் ஃபர்ஹான் சொல்வது போல், தப்லிக் ஜமாத்தின் உண்மை சொரூபம் இந்தியாவில் ஒருபோதும் புரிந்து கொள்ளப்பட மாட்டாது, எந்தவொரு மசூதிக்குள்ளும் நுழைந்து நடவடிக்கை எடுக்க எந்த அரசாங்கத்திற்கும் தைரியம் இல்லை, ஏனென்றால் நம் நாட்டில் மதச் சார்பின்மை இப்படித்தான் விளங்கிக்கொள்ளப் பட்டுள்ளது. குரான் என்ற மேல் பூச்சினால் ஈர்க்கப்பட்டு பயங்கரவாதப் பாதைக்குத் தள்ளப்படும் அப்பாவி முஸ்லீம் இளைஞர்களைக் காப்பாற்ற வேண்டுமானால், ஏ கே 47 துப்பாக்கி களைத் தயாரிப்பவர்களாகவும், ஏந்தி தாக்குதல்களில் ஈடுபவர்களாகவும் ஆகாமல் காக்க வேண்டும் என்றால், தப்லிகீ ஜமாத் போன்ற பயங்கரவாத அமைப்புகள் தடை செய்யப் பட வேண்டும். இந்தியாவில் பயங்கரவாதத்தை வழிநடத்தும் தப்லிகீ ஜமாத்தின் உரிமையும் சிறுபான்மை உரிமையா என்பதை நீதிமன்றங்கள் தீர்மானிக்கட்டும், இல்லை, பழைய பல்லவியையே பாடிக் கொண்டிருக்கப் போகிறோமா?