கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடித்துள்ள சீனா, அதை பல அரசு ஊழியர்கள், ஏழைகளுக்கு கட்டாயப்படுத்தி செலுத்தி பரிசோதித்துள்ளது. இந்நிலையில், அதை தங்கள் நாட்டு பொதுமக்களுக்கு போட ஆரம்பித்துள்ளது சீனா. ஆனால் ஏற்கனவே போட்டவர்களின் நிலை என்ன, பக்கவிளைவுகள் உண்டா என எந்த கேள்விக்கும் சரியான பதில் இல்லை. மருந்தின் விளக்கக்குறிப்புகளை படித்துப்பார்க்க மக்கள் அனுமதிக்கப்படுவது இல்லை. எனவே கொரோனா தடுப்பு மருந்து என்றாலே ‘இப்போது வேண்டாம், பிறகு போட்டுக்கொள்கிறேனே’ என மக்கள் ஓட ஆரம்பிக்கின்றனர்.