மின் கட்டண உயர்வு தேவையற்றது

சென்னையில் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “நீட் தேர்வை பொறுத்தவரை பா.ஜ.கவுக்கு அரசியல் செய்ய வேண்டிய நோக்கம் கிடையாது. நீட் தேர்வு தமிழக மாணவர்களுக்கு நல்லது. குறிப்பாக பின்தங்கிய பகுதிகளில் இருந்து நீட் தேர்வின் மூலம் மாணவர்கள் மருத்துவம் படித்து வருகின்றனர். தமிழகத்தில் ஆரம்ப காலங்களில் நீட் தேர்வால் பிரச்னை இருந்தது உண்மை தான். காரணம், தமிழகத்தில் கடைபிடிக்கப்பட்டு வந்த பாடத்திட்டத்திற்கும், நீட் தேர்வுக்கு தயாராவதற்கான பாடத்திட்டத்திற்கும் பல வித்தியாசங்கள் இருந்தன. ஆனால் பாடத்திட்டம் மாற்றமடைந்த பின், மாணவர்கள் நீட் தேர்வுக்கு தயாராகி வருகிறார்கள். நீட் தேர்வு விவகாரத்தில் ஏழை எளிய மக்களை ஏமாற்றுவதை தி.மு.க அரசு நிறுத்திக்கொள்ள வேண்டும். மாணவர்களை தவறாக வழி நடத்தி தற்கொலைக்கு தூண்டுகிறது தி.மு.க. நீட் தேர்வை தமிழகத்தை தவிர வேறு எந்த மாநிலமும் எதிர்க்கவில்லை. ஸ்டாலின் மட்டும் நீட் வேண்டாம் என எதிர்த்து, மாணவர்களின் மன தைரியத்தை உடைத்து வருகிறார். நீட் தேர்வு இருக்கும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் மின்கட்டண உயர்வு தேவையற்றது. இது தமிழகத்தின் கருப்பு நாள். மின் கட்டண விலை உயர்வை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். இது, தேர்தலில் தி.மு.கவுக்கு பெரிய அடியாக இருக்கும். ராகுல் காந்தி பாதை யாத்திரை என்பது மக்களை இணைப்பதா அல்லது பிரிப்பதா என்பது தெரியவில்லை” என்று கூறினார்.